தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை: தங்கம் தென்னரசு

பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை: தங்கம் தென்னரசு

பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை: தங்கம் தென்னரசு


UPDATED : அக் 14, 2009 12:00 AM

ADDED : அக் 14, 2009 02:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2009 12:00 AM ADDED : அக் 14, 2009 02:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்காக பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் இதற்கான திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக 20 புதிய அதிகாரிகள் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இவர்கள் சி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து செயல்படுவார்கள். இந்தப் பணிக்கு உதவி முதுநிலை ஆசிரியர்கள் நிலையில் உள்ளவர்களை இனம் காணவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலில் ஆர்வம் மிக்கவர்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களுடன் நெருங்கி தொடர்பு கொண்டு இவர்கள் பணியாற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


தற்போதும் சில பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் இருந்து வருகின்றன. மத்திய அரசின் அல்லது மாநில அரசில் உள்ள சில திட்டங்களின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மன்றங்களை முறைபடுத்து செயல்படுத்தச் செய்ய வேண்டியது அவசியம் என கருதுகிறோம் என்றார் அவர்.

முதல் கட்டமாக அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சிக்காக தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us