சென்னைப் பல்கலை.யில் கருணாநிதி சிந்தனைகளில் எம்.ஏ., படிப்பு!
சென்னைப் பல்கலை.யில் கருணாநிதி சிந்தனைகளில் எம்.ஏ., படிப்பு!
UPDATED : அக் 15, 2009 12:00 AM
ADDED : அக் 15, 2009 03:26 PM
இதேபோல, ஈ.வே.ரா., அண்ணாதுரை ஆகியோரது சிந்தனைகளிலும் எம்.ஏ., பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: சென்னைப் பல்கலையின் முதல் துணைவேந்த ராக இருந்த, ஏ.லட்சுமண முதலியார் பெயரில், அடிப்படை அறிவியல்(பேசிக் சயின்ஸ்) மையம் விரைவில் துவக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை அறிவியல் பற்றிய ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட்டால், அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும். இந்தியாவில் உயர் கல்வி எண்ணிக்கை, 16 சதவீதத்தை தாண்டவில்லை. வெளிநாடுகளில், 85 சதவீதத்தை எட்டியுள்ளது.நகர் பகுதிகளில் தான் அதிகளவில் கல்லூரிகள் உள்ளன. கிராமப் புறங்களில் கல்லூரி துவக்கினால், அனுமதிக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை தரப்படும்.
கிராமத்தில் துவக்கப்படும் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை பத்து சதவீதம் கூடுதலாக வழங்கப்படும்.பல்கலைக்கு உட்பட்ட ஒவ்வொரு கல்லூரியிலும், 10 ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட உள்ளது. அதே போன்று சென்னை பல்கலையில் 60 துறைகள் உள்ளன.
ஒவ்வொரு துறையிலும் ஒரு ஏழை மாணவருக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும். அடிப்படை அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை அரிதாக உள்ளது. இதை உயர்த்துவதன் மூலமாகத் தான், பொருளாதாரம், தொழிற்சாலை உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்படும்.
அண்ணாதுரை, ஈ.வெ.ரா., கருணாநிதி பெயரில் தனித்தனியாக எம்.ஏ., பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளன. பல்கலையில் படித்துக் கொண்டே மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் திட்டத்திற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய, பல்கலை மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு முறை கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.
