தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீண்ட இழுபறிக்கு பின் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி அட்மிஷன்!

நீண்ட இழுபறிக்கு பின் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி அட்மிஷன்!

நீண்ட இழுபறிக்கு பின் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி அட்மிஷன்!


UPDATED : அக் 15, 2009 12:00 AM

ADDED : அக் 15, 2009 01:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2009 12:00 AM ADDED : அக் 15, 2009 01:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு


ஒரே நாளில், 99 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் இரு முறை நடத்திய ஆய்வில், கட்டட பணிகள் முடியாமல் இருப்பதை காரணம் காட்டி, மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்து வந்தது.


தமிழக

சுகாதாரத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கடந்த செப்.,16ம் தேதி, இந்திய மருந்துவ கவுன்சில் இறுதி கட்ட ஆய்வு நடத்தியது. நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தேவையான வசதிகள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் மற்றும் மத்திய அரசுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிக்கை வழங்கியது.


சென்னையில்

செப்., 26ம் தேதி நடந்த மூன்றாவது மருத்துவ கவுன்சிலிங்கில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தமிழக ஒதுக்கீட்டில் 85 மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 மாணவர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு நடப்பாண்டு முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. சேர்க்கை அனுமதி பெற்ற மாணவர்கள், செப்., 30ம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்த போது, மத்திய அரசின் ஒப்புதல் கடிதம் கிடைக்காமல், மாணவர் சேர்க்கை ஒத்தி வைக்கப்பட்டது.


இந்த

வழக்கு, கடந்த 9ம் தேதி, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மூன்று கல்லூரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை அனுமதி வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.


இதற்கான

அனுமதி கடிதம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்து சேர்ந்தது.இதையடுத்து, சேர்க்கை அனுமதி பெற்ற 99 மாணவர்கள், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us