அனைவருக்கும் கல்வி: விரைவில் 564 ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு
அனைவருக்கும் கல்வி: விரைவில் 564 ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு
UPDATED : அக் 15, 2009 12:00 AM
ADDED : அக் 15, 2009 03:32 PM
அ நிறம் | அளவு
பள்ளிக் கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்யப்பட்டதால், 564 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ் பாடத்தில் 18, ஆங்கிலத்தில் 18, கணிதத்தில் 283, இயற்பியலில் 29, வேதியியலில் 30, தாவரவியல் 27, விலங்கியல் 45, வரலாற்று 90, புவியியல் 24 என 564 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தி இந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு குற்றாலிங்கம் தெரிவித்துள்ளார்.
