இரண்டாம் நிலை போலீஸ்பணி: அக்.25ல் எழுத்துத் தேர்வு
இரண்டாம் நிலை போலீஸ்பணி: அக்.25ல் எழுத்துத் தேர்வு
UPDATED : அக் 16, 2009 12:00 AM
ADDED : அக் 16, 2009 02:43 PM
இத்தேர்வில் பங்கேற்க 7,505 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
மாநிலக் கல்லூரி, எத்திராஜ் பெண்கள் கல்லூரி, அண்ணா நகர் மேற்கு எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, நுங்கம்பா3க்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குருநானக் கல்லூரி, பெசன்ட் நகர் செயின்ட் ஜான் பள்ளி, அடையாறு இந்திராநகர் இந்து மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி இந்து சீனியர் பள்ளி, சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.
அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவில் வரும் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் அலுவலரை அணுகி அழைப்புக் கடித நகலை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
