UPDATED : நவ 03, 2009 12:00 AM
ADDED : நவ 03, 2009 11:47 AM
அ நிறம் | அளவு
தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர். எம்., பல்கலைக் கழகம் ஆகியவை சார்பில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் என்.டி.பி., திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில், கடந்தாண்டு பிளஸ்2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர் அசோக்கிற்கு தினமலர் சார்பில் வெள்ளிப் பதக்கம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை கல்வியாளர் ரமேஷ் பிரபா பரிசாக வழங்கினார்.
பரிசு பெற்ற மாணவர் அசோக் பேசுகையில், தமிழ் பாடத்தில் அதிக மதிப் பெண் பெற்றதால் தான் நான் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றேன். தமிழ் பாடத்தை படித்த பின்னர் தினமும் பிழையின்றி எழுதிப் பார்க்க வேண்டும். தினமும் எழுதிப் பார்ப்பதால் படித்த பாடங்கள் மனதில் பதியும்.ஒவ்வொரு நாளும் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே படிக்க வேண்டும். நேரம் இல்லாதவர்கள் அந்த வாரங்களில் வரும் விடுமுறை நாட்களில் படிக்க வேண்டும். தவறாமல் விடியற்காலை எழுந்து படிக்க வேண்டும்.பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது என்பது கல்லூரி வாழ்க்கைக்கு முதல்படி. தேர்வு நேரத்தில் பதட்டமடையக் கூடாது. இயல்பாக இருந்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
