தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்விக்குப் போதிய நிதி வழங்க தவறிய மத்திய அரசு!

உயர்கல்விக்குப் போதிய நிதி வழங்க தவறிய மத்திய அரசு!

உயர்கல்விக்குப் போதிய நிதி வழங்க தவறிய மத்திய அரசு!


UPDATED : நவ 03, 2009 12:00 AM

ADDED : நவ 03, 2009 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2009 12:00 AM ADDED : நவ 03, 2009 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியாவில் உயர்கல்வியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் வேத பிரகாஷ் பேசியதாவது:


11வது ஐந்து ஆண்டு திட்டத்தில் உயர்கல்விக்காக ரூ.46,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு ரூ.6,600 கோடியளவுக்கே மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.


ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உயர்கல்விக்காக ரூ.85 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 10வது ஐந்து ஆண்டு திட்டத்துடன் ஒப்பிடும்போது இது ஒன்பது மடங்கு அதிகம்.  மத்திய அரசின் ஒதுக்கீட்டில் கலை மற்றும் அறிவியல் கல்விக்காக 11வது திட்ட காலத்தில் (2007-2012) ரூ.46,600 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை மத்திய அரசு ரூ.6,600 கோடி நிதியே வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகை காகிதத்தில் புதைந்து கிடக்கிறது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நிதி கேட்கின்ற சூழ்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.


நாட்டில் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்பட13 மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவை நம்பகத்தனையை இழந்துவிட்டன்? மாணவர்களின் வாழ்க்கையுடன் ஏன் விளையாட வேண்டும்? என்றார் பேராசிரியர் வேத பிரகாஷ்.


152 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.16 கோடி நிதி வழங்கப்படுகிறது. அதேசமயம், பாண்டிசேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு ரூ.75 கோடி வழங்கப்படுகிறது. இந்த மாதிரியான நடைமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு கடைப்பிடிப்பதேன் என்று சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் கேள்வி எழுப்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us