தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவ5ம் தேதி பிளஸ் டூ தனித் தேர்வு முடிவு!

நவ5ம் தேதி பிளஸ் டூ தனித் தேர்வு முடிவு!

நவ5ம் தேதி பிளஸ் டூ தனித் தேர்வு முடிவு!


UPDATED : நவ 04, 2009 12:00 AM

ADDED : நவ 04, 2009 12:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2009 12:00 AM ADDED : நவ 04, 2009 12:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்வு எழுதிய மையங்களில் நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.


தக்கல் திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்களின் வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு எழுதிய பாடங்களின் நகல் கோரியோ மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக்கல்வி அலுவலகங்களில் வழங்கப்படும்.


விடைத்தாள் நகல் கோரும் மாணவர்கள் பகுதி ஒன்று - மொழிப்பாடம், பகுதி இரண்டு - மொழிப்பாடம் (ஆங்கிலம்) ஆகியவற்றுக்கு தலா 550 ரூபாய் வீதமும் பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.


மறுகூட்டல் என்றால் மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் ஆகியவற்றுக்கு  தலா 305 ரூபாய் வீதமும் பிற பாடங்களுக்கு 205 ரூபாய் வீதமும் செலுத்த வேண்டும். இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற முகவரிக்கு டி.டி.யாக எடுத்து, விண்ணப்பம் பெற்ற அலுவலகத்தில் 13ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.


தனித்தேர்வு முடிவுகள் கீழ்க்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது:
www.dge1.tn.nic.in

www.pallikalvi.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us