தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுயநிதி படிப்பு: கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வேதனை

சுயநிதி படிப்பு: கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வேதனை

சுயநிதி படிப்பு: கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வேதனை


UPDATED : நவ 04, 2009 12:00 AM

ADDED : நவ 04, 2009 12:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2009 12:00 AM ADDED : நவ 04, 2009 12:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு


அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரெகுலர் ஆசிரியர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கிறது. அதேநேரம் அதே கல்லூரிகளில் சுயநிதி பாடப் பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் போதிய சம்பளம் இன்றி வேதனைப்படுகின்றனர். சில சுயநிதி கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபாய் முதல் வழங்கப்படுகிறது.


பல தரமான மெட்ரிக்., பள்ளிகளில் கூட ஆசிரியர்களுக்கு 10ஆயிரம், 15 ஆயிரம் என வழங்கப்படும்போது, முதுகலை பட்டத்துடன் எம்.பில்., பி.எச்டி., போன்ற ஆய்வுப் படிப்புகளை முடித்த ஆசிரியர்கள் பலர் சில சுயநிதி கல்லூரிகளில் மூவாயிரத்துக்கும், நான்காயிரத்துக்கும் பணியாற்றி வருகின்றனர். துவக்க நிலையில் உள்ள ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்கள் பெறுவதற்கு நிகராக சம்பளம் கிடைப்பதால் பெரிதும் வேதனைப்படுகின்றனர்.

கல்லூரிகளில் வாரம் 20 முதல் 25 வகுப்புகள் வரை கற்பிக்கும் தங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 300 வரை வழங்கப்பட்டால்கூட ஆறாயிரம் ரூபாயோ, 7 ஆயிரம் ரூபாயோ கிடைக்கும். இது ஓரளவு போதுமானதாக இருக்கும். அவ்வாறின்றி அதிக பணிப்பளு இருந்தால்கூட மிகவும் குறைவான சம்பளமே சில நிர்வாகங்கள் தருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
 
யு.ஜி.சி., போன்ற உயர்கல்வி அமைப்புகள் சுயநிதி கல்லூரிகள், சுயநிதி படிப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் குறித்து நிர்ணயம் செய்திருந்தாலும் அதை சில நிர்வாகங்கள் கடைபிடிப்பதில்லை. ஆசிரியர்களின் கல்வித் தகுதி, திறமை போன்றவற்றை அறிந்து அதற்கேற்ப கூடுதல் சம்பளம் தரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
 
கல்லூரிகளில் பணியாற்றுவதால் கிடைக்கும் அனுபவம், வரும்காலத்தில் நிரந்தர பணிக்கு செல்லும்போது பிளஸ் பாயின்டாக இருக்கும் என்பதால் சம்பளத்தை கண்டு கொள்ளாமல் பணியாற்ற வேண்டியுள்ளது. இருப்பினும் நிரந்தர வாய்ப்பு வரும்போது கல்லூரி நிர்வாகங்கள் பணம், செல்வாக்கு உள்ளோரையே பயன்படுத்திக் கொள்கின்றனர். நாங்கள் புறக்கணிக்கப்பட்டுவிடுகிறோம் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us