தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்த்தப்படுமா, பள்ளிகளின் தரம்!

உயர்த்தப்படுமா, பள்ளிகளின் தரம்!

உயர்த்தப்படுமா, பள்ளிகளின் தரம்!


UPDATED : நவ 04, 2009 12:00 AM

ADDED : நவ 04, 2009 02:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2009 12:00 AM ADDED : நவ 04, 2009 02:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாளுக்கு நாள், அவர்கள் சந்திக்கும் அவஸ்தைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இப்பிரச்னைகளை தீர்க்க, அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த, மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


திருப்பூரில் பனியன் கம்பெனி ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் என நடுத்தர பிரிவை சேர்ந்தவர்கள் லட்சக் கணக்கில் உள்ளனர். தனியார் பள்ளிகளில் பணம் செலுத்தி படிக்க வைக்க இயலாதவர்கள், அரசு பள்ளிகளுக்கு வருகின்றனர்.
 
திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் அரசு ஆரம்ப பள்ளிகள் இருக்கும் அளவுக்கு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இல்லை. சில பள்ளிகளே உள்ளன; இருப்பினும், முறையான உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வசதி இல்லாததால், நகர்ப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கே மாணவர்கள் படையெடுக்கின்றனர்.
 
திருப்பூர் நகர்ப்புறத்தில் ஜெய் வாபாய், பழனியம்மாள், கே.எஸ்.சி., நஞ்சப்பா என குறிப்பிடத்தக்க அளவிலேயே அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த நான்கு அரசு பள்ளிகளில் மட்டும் கணக் கெடுத்தால் குறைந்தது 18,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர். ஒரு வகுப்புக்கு குறைந்தது 80 பேர் படிக்கின்றனர். அதிகப்படியான மாணவர்கள் இருப்பதால், ஆசிரியர்களுக்கு அதிக வேலைச்சுமை ஏற்படுகிறது.அனைத்து குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்கி, கற்பிப்பது சாத்தியமில்லாமல் போகிறது.
 
பள்ளி நிர்வாகத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த சேர்க்கையை குறைக்கும் போது, இப்பள்ளிகளை விட்டால், வேறு பள்ளிகள் இல்லாத காரணத்தால், பள்ளிகளின் முன், பெற்றோர் மறியலில் ஈடுபடும் சம்பவம் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.தற்போது, நொய்யல், மண்ணரை, அல்-அமின் உள்ளிட்ட பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள் ளன.
 
ஆனால், திருப்பூர் நகரின் கல்வி தேவைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தற்போது இருக்கும் கல்வி நிலையங்கள் போதாது. பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு என திருப்பூரின் சுற்றுவட்டார பகுதிகளில், அரசு மேல்நிலைப்பள்ளிகள் இல்லை; சில, அரசு உதவி பெறும் பள்ளிகளே உள்ளன.

எனவே, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு உயர்த்தினால், ஒரே இடத்தில் அதிகப்படியான மாணவ, மாணவியர் பயிலும் நிலை குறையும். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ, மாணவியர் தினமும் திருப்பூர் வந்து அவஸ்தைப்பட வேண்டிய அவசியமும் இருக்காது.
 
திருப்பூர் நகர்ப்புறபள்ளிகளில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், 6,000க்கும் அதிகமான மாணவ, மாணவியர் பள்ளிக்கு பஸ்சில் வந்து செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பஸ் களில் இடமில்லாமல், மாணவர்கள் படிக்கட்டில் நின்று பயணிக்கின்றனர்; விபத்துகள் நேரிட வாய்ப்புகள் உள்ளன. சில சமயங்களில் பஸ் கிடைக்காமல், அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. அதுபோன்ற நேரத்தில், கூடுதல் பஸ்களை மாணவ, மாணவியருக்காக அதிகாரிகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us