தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எது சிறந்த கல்வி? : முன்னாள் துணைவேந்தர் பேச்சு

எது சிறந்த கல்வி? : முன்னாள் துணைவேந்தர் பேச்சு

எது சிறந்த கல்வி? : முன்னாள் துணைவேந்தர் பேச்சு


UPDATED : நவ 05, 2009 12:00 AM

ADDED : நவ 05, 2009 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2009 12:00 AM ADDED : நவ 05, 2009 12:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த முறை நடந்த, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில் தனிப் பாடங்களில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற பாடுபட்ட 650 ஆசிரியர்களுக்கு, மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப் பட்டது. கோவை, மணி மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பேசியதாவது:


படிப்பு கற்றுத் தந்த ஆசிரியர்களை மாணவர்கள் மறக்க மாட்டார்கள். கோவை மாவட்டத்தில் உள்ள 5,000 ஆசிரியர்களில், சிறப்பாக செயல்பட்ட 650 பேரை பிறருக்கு அடையா ளம் காட்ட பாராட்டு விழா உதவும். இந்த ஆசிரியர்களை ரோல் மாடல் ஆக கொண்டு பிற ஆசிரியர்களும் இதே போல் சிறப்பாக செயல்பட வேண்டும். பத்து, பிளஸ் 2 வகுப்பு பாடங்களில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற, 6,7,8ம் வகுப்புகளில் கற்பித்த ஆசிரியர் களும் காரணம் என்பதால் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வாறு, ஆனந்தி பேசினார்.
 
பாரதியார் பல்கலை, முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம் பேசியதாவது: ஆசிரியர்கள் சமுதாயத்தை மாற்றி யமைக்கும் திறன் படைத்தவர்கள். மாணவர்களுக்கு சிறப்பாக கற்பித்த நினைவுகள் தான் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பரிசு. சிறந்த கல்வி என்பது வாழ்க்கை முழுவதும் உதவுவதாக இருக்க வேண்டும்; வேலை பெற்றுத் தருவதாக இருக்க வேண்டும்; சமுதாயத் தில் நல்ல குடிமகனை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
 
இன்று, பள்ளியில் முதல் வகுப்பில் சேருபவர்களில் 10 சதவீதத்தினர் தான் பத்தாம் வகுப்பை கடக்கின்றனர். இந்தியாவில் 18 வயது முதல் 21 வயது வரையுள்ள மாணவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே கல்லூரி செல்லும் வாய்ப்பு பெறுகின்றனர். இதில், தமிழகத்தில் 10 சதவீத மாணவர்களால் மட்டுமே கல்லூரிக்கு செல்ல முடிகிறது.
 
படித்து முடிப்பவர்களில் 20-25 சதவீத மாணவர்களுக்கு வேலை பெறு வதற்கான திறன் இருப்பதில்லை. மாணவர்களின் வேலை பெறும் திறனை வளர்ப்பதில் பள்ளிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

மோசமான குடிமகன்களை உருவாக்கினால் நாளை நம் நாடு மோசமான விளைவுகளை சந்திக்கும். ஆகவே ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் சமூக பொறுப்பை உணர்ந்து கற்பிக்க வேண்டும்.  இவ்வாறு, சுப்ரமணியம் பேசினார்.

பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற பாடுபட்ட 650 ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.  மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷிணி, பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் ருத்ர மூர்த்தி, சர்வஜனா மேல்நிலைப் பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன், மணி மேல்நிலைப்பள்ளி முதல்வர் சத்திய நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us