அரசு கல்லூரியில் ஷிப்ட் வகுப்புகள்: மாணவர்கள் கவலை
அரசு கல்லூரியில் ஷிப்ட் வகுப்புகள்: மாணவர்கள் கவலை
UPDATED : நவ 05, 2009 12:00 AM
ADDED : நவ 05, 2009 12:12 PM
அ நிறம் | அளவு
ஆறு வகுப்பறைகள் எம்.எல்.ஏ., கோவைதங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துகட்டப்பட்டது. ஆகஸ்ட்டில் துணை முதல்வர் ஸ்டாலின் கல்லூரி புதிய கட்டடத்தை திறந்து வைத்து, 2.5 கோடி ரூபாயுக்கு கல்லூரிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்றார்.தற்போது, ஆறு புதிய வகுப்பறையில் ஒரு பிரிவு மாணவர்களும், மீதமுள்ள மாணவர்கள் சின்கோனாவிலும் படிக்கின்றனர்.
இரு பகுதிகளிலும் ஷிப்ட் முறையில் வகுப்புக்கள் நடக்கின்றன.எனவே, 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் கட்டடம் கட்டும் பணி விரைவில் நிறைவடைந்தால் மட்டுமே கல்வியின் தரம் நன்றாகயிருக்கும் என மாணவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
அரசு கலைக்கல்லூரி முதல்வர் மதிவாணனிடம் கேட்ட போது, கல்லூரிக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பில் வகுப்பறை கட்டும் பணி நடக்கிறது. நமக்கு நாமே திட்டத்தில் நான்கு புதிய வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன. கட்டடம் முழுமையாக கட்டியபின் ஒரே இடத்தில் கல்லூரி செயல்படும். வகுப்பறை இல்லாததால் தற்போது ஷிப்ட் முறையில் மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடக்கிறது என்றார்.
