ஓரே நிர்வாகத்தில் அனைத்து வகைப் பள்ளிகள்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்
ஓரே நிர்வாகத்தில் அனைத்து வகைப் பள்ளிகள்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்
UPDATED : நவ 06, 2009 12:00 AM
ADDED : நவ 06, 2009 12:39 PM
மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு அனைத்து கல்வி முறைகளையும் ஒருங்கிணைத்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த உள்ளது. இதை ஆதரித்து, எங்கள் அமைப்பு சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடத்த உள்ளோம்.
சமச்சீர் கல்வி கொண்டு வந்தது போல தமிழகத்தில் மாநகராட்சி, சமூக நலத்துறை, கள்ளர், ஆதிதிராவிடர் என பல தரப்பு பள்ளிகளையும் ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு, சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டால் சிற்றுண்டியும் வழங்க வேண்டும்.
விடைத்தாள் திருத்துவதற்கு ஐந்து ரூபாய் வழங்குவதை 10 ஆக உயர்த்தி தர வேண்டும். பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு போதிய வசதிகள் இல்லாததால், மாவட்டந்தோறும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழு அமலாக்கத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடையே 200 ரூபாய் தான் வித்தியாசம் உள்ளது. மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கும், எங்களுக்கும் பெரும் இடைவெளி உள்ளது. இந்நிலையை மாற்றி அடிப்படை சம்பளமாக 21 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசு ஆறாவது ஊதியக்குழுவை அமல்படுத்தியது, மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் 15 நிமிடங்கள் வழங்கியது, பதவி உயர்வு மாற்றத்திற்காக ஒரு நபர் குழு அமைத்ததற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், மதுரையில் நாளை தென்மண்டல மாநாடு நடக்க உள்ளது. இதில், 6,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பர். மேலும், அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி பங்கேற்க உள்ளனர். இவ்வாறு மணிவாசகன் கூறினார்.
