சிறுபான்மையினர் கல்வி நிறுவனச் செயல்பாடுகளைக் கவனிக்க உறுதி!
சிறுபான்மையினர் கல்வி நிறுவனச் செயல்பாடுகளைக் கவனிக்க உறுதி!
UPDATED : நவ 06, 2009 12:00 AM
ADDED : நவ 06, 2009 12:52 PM
அ நிறம் | அளவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் உதவி குறித்து மாநில சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை மற்றும் உறுப்பினர் மவுரியா மெத்பால் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கலெக்டர்
அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு பின் கமிஷன் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை நிருபர்களிடம் கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், சிறுபான்மையின மக்களின் கோரிக்கை, குறை குறித்தும் கேட்டறியப்பட்டது.
இதில்
, கிறிஸ்தவர், முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோபர் பங்கேற்றனர். கல்வி நிறுவனங்களுக்கான அனுமதி வழங்குவதிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் மற்றும் கல்விக்கடன் வழங்குதல் போன்றவற்றில் காலதாமதம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இவை விரைவில் சரிசெய்யப்படும்.சிறுபான்மையின
மக்களின் குறை மற்றும் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு உணர்த்துவதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையின பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக்குழு அமைக்கவேண்டும் என்றும், சிறுபான்மையினர் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.நடவடிக்கை
எடுப்பதாக மாவட்ட கலெக்டர் உறுதியளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெற்று சிறுபான்மையினர் நடத்திவரும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்படும்.தமிழகத்தில் சிறுபான்மையினர் மேம்பாட்டு பணிகளுக்காக மத்திய அரசு இந்த ஆண்டு 42.50 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இவை முறையாக, முழுமையாக செலவிடப்பட்டுள்ளது.இதில்
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மட்டும் 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் 25 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிக்காகவும், 25 லட்சம் சிறுதொழிலுக்காகவும், 10 லட்சம் கல்விக்கடனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டும் 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.இதில்
கல்விக்கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 7.20 லட்சம் ரூபாய் செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட நிதி பிற மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மையினர் கமிஷன் செயல்பாடுகள் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாவட்ட கலெக்டர் சுகந்தி, எஸ்.பி., மூர்த்தி, டி.ஆர்.ஓ., ராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.