UPDATED : நவ 06, 2009 12:00 AM
ADDED : நவ 06, 2009 01:01 PM
அ நிறம் | அளவு
இவருக்கு இளம் அறிஞர்&' விருதும், விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. தமிழ் இலக்கணத் துறையில் சிறந்த வல்லுனராக விளங்கும் இவர், இதுவரை 28 நூல்களை எழுதியும், பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் யாப்பிலக்கணம், ஓலைச்சுவடியியல், பாரதிதாசன் இலக்கியம் ஆகியவற்றில் ஆய்வுகளையும் செய்துள்ளார். இவர், தஞ்சாவூரில் சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ்த் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஓலைச்சுவடியில் இருந்து பல நூல்களை ஆராய்ச்சி செய்து பதிப்பித்துள்ளார்.
இந்திய அரசின், தமிழ் செம்மொழி திட்டத்தில் செம்மொழி நூல்களைச் செம்பதிப்பாக உருவாக்கும் வல்லுனர்களில் ஒருவராக இடம் பெற்று, முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கியத்தை ஏற்கனவே பதிப்பித்து உள்ளார். பேரா.கா.சிவத்தம்பி, இவரை யாப்பிலக்கணத்துறையில் இளம் அறிஞர் என குறிப்பிட்டுள்ளார்.
