தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வில் நூறு சத தேர்ச்சி அடைய சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு

தேர்வில் நூறு சத தேர்ச்சி அடைய சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு

தேர்வில் நூறு சத தேர்ச்சி அடைய சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு


UPDATED : நவ 07, 2009 12:00 AM

ADDED : நவ 07, 2009 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2009 12:00 AM ADDED : நவ 07, 2009 09:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் உள்ளன. 42 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன.

ஆண்டுதோறும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 10 ஆயிரம் பேரும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 13 ஆயிரம் மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் சராசரியாக 83 சதவீதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 80 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். பிளஸ் 2 தேர்வில் ஒரு அரசு பள்ளிக்கூட நூறு சதவீத தேர்ச்சியை எட்டுவதில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மிக குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகள் மட்டுமே சதம் அடிக்கின்றன.

மெட்ரிக் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளிகளை ஆய்வு செய்து, ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன்படி, அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளித்து அரசு பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என, கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தில் அரசும் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது.

காலாண்டு தேர்வை அடிப்படையாக வைத்து, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல வகையிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வியில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பாடங்களை சேர்ந்த ஆசிரியர்களை கொண்டே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

நடப்பாண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு பள்ளிகள் நூறு சதவீத பெற ஆசிரியர்களும் முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us