தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மழைக்காக பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பதில் காலதாமதம்!

மழைக்காக பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பதில் காலதாமதம்!

மழைக்காக பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பதில் காலதாமதம்!


UPDATED : நவ 07, 2009 12:00 AM

ADDED : நவ 07, 2009 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2009 12:00 AM ADDED : நவ 07, 2009 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதன் மைக் கல்வி அதிகாரிகள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, நடைமுறை ரீதியாக பல்வேறு சிக்கல்களை எழுப்புவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை அறிவிக்கும் அதிகாரத்தை, பழைய முறைப்படி, முதன்மைக் கல்வி அதிகாரிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பருவமழை தீவிரமடையும் போது, மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. மழையில் நனைந்து மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது எனக் கருதி, பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். விடுமுறையை சரிசெய்யும் வகையில், சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்.கனமழை பெய்யும் நேரத்தில், மாவட்டத்தில் உள்ள நிலைமைக்கு தகுந்தபடி விடுமுறை அறிவிக்கும் அதிகாரம், சில ஆண்டுகளுக்கு முன் வரை, முதன்மை கல்வி அதிகாரியிடம் இருந்தது. பிறகு, கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரு வருவாய் மாவட்டத்தில், நான்கு, ஐந்து கல்வி மாவட்டங்கள் இருக்கும். வருவாய் மாவட்ட அள வில், முதன்மைக் கல்வி அதிகாரி இருக்கிறார். மழை பெய்யும் நேரத் தில், கல்வி மாவட்ட வாரியாக விவரங்களை பெற்று, அதனடிப்படையில், கலெக்டருக்கு முதன்மைக் கல்வி அதிகாரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.சி.இ.ஓ., கருத்தை பெற்றதும், பள்ளிகளுக்கு கலெக்டர் விடுமுறை அறிவிக்கிறார். இந்த நடைமுறையில், பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்த கருத்துக்களை, மாவட்ட கலெக்டரிடம் உடனடியாக தெரிவிக்க முடியாத நிலை இருப்பதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தகவல் தொடர்பில், இருதரப்பினருக்கும் இடைவெளி இருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பள்ளிகளுக்குச் செல் வதில் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.மழை பெய்தால், விடுமுறை அறிவிப்பு வருகிறதா என்று, "டிவி&' சேனல்களை பார்க்கின்றனர். தனியார் பள்ளிகள் 8.30 மணிக்கு துவங்கி விடுகின்றன. விடுமுறை குறித்த அறிவிப்பு, காலை ஏழு மணிக்குள் வெளியிட்டால் தான், மாணவர்கள் வீட்டிலிருந்து புறப்படுவதை தவிர்க்க முடியும்.ஆனால், பெரும்பாலும் எட்டு மணிக்கு பிறகே அறிவிப்பு வெளியாகிறது. இதனால், அதிகமான மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே பள்ளிகளுக்கு வர வேண்டியிருக்கிறது.

பள்ளிக்கு வந்தபின், விடுமுறை அறிவிப்பு தெரிவிக்கப்படுகிறது. அதன்பின், மாணவர்களும், பெற் றோர்களும் முனகிக் கொண்டே, வீட்டுக்குச் செல்கின்றனர். இந்த பிரச்னைகளுக்கு, விடுமுறை குறித்து முடிவெடுப்பதில் ஏற்படுகிற தாமதம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.கனமழை பெய்யும்போது, அங்குள்ள நிலைமை, பள்ளிகள் அமைந்துள்ள இடத்திற்கு மாணவர்கள் சென்று வரக்கூடிய வசதி இருக்கிறதா போன்ற தகவல்கள், கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும்.அவர்கள், உடனுக்குடன் முதன் மைக் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொள்வதில் எந்தவித பிரச்னையும் ஏற்படுவதில்லை. எனவே, பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று, கல்வித் துறை வட்டாரத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us