தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/20 ஆண்டுகளாக காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்கள்

20 ஆண்டுகளாக காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்கள்

20 ஆண்டுகளாக காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்கள்


UPDATED : நவ 08, 2009 12:00 AM

ADDED : நவ 08, 2009 08:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2009 12:00 AM ADDED : நவ 08, 2009 08:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.கல்லுப்பட்டி, நாமக்கல், மாயனூர், கோத்தகிரி, முனைஞ்சிப்பட்டி, பாலையம்பட்டி, இராணிப்பேட்டை, ஆடுதுறை, சென்னை, கிருஷ்ணகிரி, பெருந்துறை, ஒட்டான்சத்திரம், புதுக்கோட்டை, காளையர்கோவில், வானரமுட்டி, மஞ்சூர், கீழ்ப்பென்னாத்தூர், அரியூர், மன்னார்குடி, உத்தமபாளையம், களியாம்பூண்டி, கீழப்பழுவூர், வடலூர், உத்தமசோழபுரம் உள்ளிட்ட 24 ஆசிரியர்பயிற்சி நிறுவனங்களில் நூலகர் பணியிடங்களில் காலியாக உள்ளது.

இதில் டி.கல்லுப்பட்டி பயிற்சி நிறுவனத்தில் 1988 முதல் மற்றவைகளில் 1990 முதல்1999 முடிய உள்ள காலகட்டங்களில் காலியாகி உள்ளது.  இந்த பணியிடங்களில் இது வரை நூலகர் நியமனம் செய்யப்பட வில்லை.  தற்போது அரசு கிளைநூலகர்களில் விருப்பப்பட்டியல் மூன்றாம் நிலை நூலகர் நிலையில் கோரியுள்ளது. இதில் நூலகர் விருப்பப்பட்டு முன் வரவில்லை என்றால் இந்த பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்க வேண்டிய அவலநிலை ஏற்படும்.

மாணவர்களுக்கு புத்தக அறிவை புகட்டும் ஆசிரியர்களுக்கே பயிற்சி நிறுவனங்களில் நூலகம் செயல்படாமல் இருந்தால் இங்கே பயிற்சி பெறும் ஆசிரியர்கள், பாடத்திற்கு அப்பாற்பட்ட புத்தகங்களை மாணவர்களுக்கு எவ்வாறு அறிமுகம் செய்ய முடியும். எனவே ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டாயம் நூலகங்களையும், நூலகர்களையும் உருவாக்கினால் தான் அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us