தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகில இந்திய படிப்புகளில் தமிழக மாணவர்களின் பங்கேற்பு குறைவு

அகில இந்திய படிப்புகளில் தமிழக மாணவர்களின் பங்கேற்பு குறைவு

அகில இந்திய படிப்புகளில் தமிழக மாணவர்களின் பங்கேற்பு குறைவு


UPDATED : நவ 08, 2009 12:00 AM

ADDED : நவ 08, 2009 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2009 12:00 AM ADDED : நவ 08, 2009 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையில் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தென்மண்டல மாநாட்டில் அவர் பேசியதாவது:

1979 - 80 ல் தமிழகத்தில் முதன்முறையாக பிளஸ் 2 தேர்வு ஆரம்பிக்கப்பட்டது. ஆயிரத்து 22 பேர் பள்ளிகள் மூலம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதினர். 2009 ல் 3 ஆயிரத்து 339 பள்ளிகள் மூலம் ஐந்து லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதினர்.

30 ஆண்டுகளில் பள்ளிகளின் தேர்ச்சி 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஆறு லட்சம் பேர் எழுத உள்ளனர். கிட்டத்தட்ட 30 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தமிழகத்தின் வேறு எந்த துறையிலும் இதுபோல இல்லை. கல்வித்துறையில் இருபெரும் குறைகள் உள்ளன.

பிளஸ் 1 வகுப்பு என்பது கவனிப்பாரற்று உள்ளது. மாணவர்களின் எண்ணத்திறவுகளுக்கு தீனி போடும் வேலையை அது செய்யவில்லை. ஊர்வலத்துக்கும், கூட்டம் சேர்ப்பதற்கு பயன்படுகிறது. ஆசிரியர்கள் இல்லாத வகுப்பில் வன்முறை, மோதல், உரசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று வழி சிந்திக்க வேண்டும்.

ஆந்திராவில் பிளஸ் 1, பிளஸ் 2வில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. பஞ்சாப், அரியானாவில் செமஸ்டர் முறை நடத்தப்படுகிறது. குஜராத் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறது. அடுத்ததாக பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் 600 பக்கங்களை மாணவர்கள் படித்து, மூன்று மணி நேரத்தில் படித்ததை வாந்தி எடுக்க வேண்டியுள்ளது.

தரம் சார்ந்த, அறிவுப்பூர்வமான வினாக்கள் வினாத்தாளில் இல்லை. இதை எப்படி மாற்றுவதென ஆலோசனை செய்யவேண்டும். ஐ.ஐ.டி., மற்றும் பல்வேறு அகில இந்திய தேர்வுகளில் தமிழக மாணவர்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக உள்ளது. ஆந்திரா முதலிடத்திலும், உ.பி., 2வது, பீகார் 3வது, தமிழகம் 4வது இடத்தில் இருக்கிறது.

அதே போல நேஷனல் டிபென்ஸ் அகாடமியில் பங்கேற்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு தான். தமிழக மாணவர்கள் மிகப்பெரிய பதவிகளை வகிக்க வேண்டுமானால் தேசியத்தேர்வுகளின் அதிகம் பங்கேற்கவேண்டும். எதை மாற்றினால், கல்வித்துறையில் மேம்பாடு அடைய முடியும் என்பதை ஆலோசனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us