தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலை ஆசிரியை பணி: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

இடைநிலை ஆசிரியை பணி: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

இடைநிலை ஆசிரியை பணி: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு


UPDATED : நவ 11, 2009 12:00 AM

ADDED : நவ 11, 2009 12:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2009 12:00 AM ADDED : நவ 11, 2009 12:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ஜான்சிராணி, அஜிதா முனீஸ்வரி உட்பட 9 பேர் தாக்கல் செய்த ரிட் மனு:


எங்கள் மாவட்டங்களிலுள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் டிப்ளமோ முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். தற்போது அரசு இடைநிலை ஆசிரியைகளை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. அதற்கு நாங்கள் விண்ணப்பித்தோம்.

அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் படித்ததாக கூறி விண்ணப்பங்களை நிராகரித்தனர். அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் படித்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் பணியிடங்களை ஒதுக்க கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


நீதிபதி கே.என்.பாஷா, மனுதாரர்கள் தங்கள் கோரிக்கை குறித்து மீண்டும் அரசுக்கு மனு செய்ய வேண்டும். அதை அரசு அதிகாரிகள் நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us