தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பில் அனைவருக்கும் செய்முறை தேர்வு!

பத்தாம் வகுப்பில் அனைவருக்கும் செய்முறை தேர்வு!

பத்தாம் வகுப்பில் அனைவருக்கும் செய்முறை தேர்வு!


UPDATED : நவ 12, 2009 12:00 AM

ADDED : நவ 12, 2009 01:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2009 12:00 AM ADDED : நவ 12, 2009 01:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் மாணவர்கள், ஏற்கனவே செய்முறைத் தேர்வுகளை செய்து வரும் நிலையில், சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.


அடுத்த கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருவதன் காரணமாக, பள்ளிக் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளன. பாடப் புத்தகம், பாட எண்ணிக்கை, தேர்வுகள், மதிப்பெண் ஆகியவை, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே முறையில் அமலுக்கு வர உள்ளது.
செய்முறைத் தேர்வில் உள்ள முரண்பாடுகளை நீக்கவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மெட்ரிக்-ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுடன், செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
 
அறிவியல் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், செய்முறை தேர்வுக்கு 100 மதிப்பெண்களும், தியரிக்கு (எழுத்துத் தேர்வு) 200 மதிப் பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன
.

சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வரும்போது, செய்முறைத் தேர்வுகளை எக்காரணம் கொண்டும் நீக்கக் கூடாது. வேண்டுமானால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் செய்முறைத் தேர்வு திட்டத்தை நீட்டித்துக் கொள்ளுங்கள் என, தனியார் பள்ளிகள் தரப்பில் கருத்து தெரிவித்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வை அமல்படுத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


அரசு பள்ளிகளில், ஏற்கனவே முழுமையான அளவில் லேப் வசதிகள் உள்ளன. வசதி குறைவாக உள்ள பள்ளிகளில், தேவையான ஆய்வக கருவிகளை வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசுப் பள்ளி மாணவர்களும் செய்முறை ரீதியாக, அறிவியல் பாடங்களை நன்றாக புரிந்துகொள்வதற்கு, செய்முறைத் தேர்வு வழி வகுக்கும் என துறை கருதுகிறது.


அனைத்து மாணவர்களுக்கும் ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண் வீதம், ஐந்து பாடங்களுக்கு 500 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். தற்போதைய நிலவரப்படி, ஸ்டேட் போர்டு மற்றும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் மொத்த மதிப்பெண் 500ஆகத் தான் உள்ளது. மெட்ரிக் மாணவர்களுக்கு 1,100 மதிப்பெண்களுக்கும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு 1,000 மதிப் பெண்களுக்கும், ஓ.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு 600 மதிப்பெண்களுக்கும் தேர்வுகள் நடத்தி, அதை 500க்கு கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படுகிறது.


சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வரும்போது, அனைத்து மாணவர்களுக்கும் நேரடியாக 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். அறிவியல் பாடத்தை பொறுத்தவரை, செய்முறைத் தேர்வுக்கு 30 மதிப்பெண்கள் என்றும் தியரிக்கு 70 மதிப்பெண்கள் என்றும் பிரிக்கப்படும் எனத் தெரிகிறது. இரு பிரிவிலும் குறைந்தபட்ச மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட உள்ளன. பத்தாம் வகுப்பிற்கான சமச்சீர் கல்வி திட்டம், 2011-2012ல் (வரும் கல்வி ஆண்டுக்கு, அடுத்த கல்வியாண்டு) அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us