பெரியார் பல்கலை.: போதிய மாணவர்கள் இல்லாத புதிய படிப்புகள்!
பெரியார் பல்கலை.: போதிய மாணவர்கள் இல்லாத புதிய படிப்புகள்!
UPDATED : நவ 12, 2009 12:00 AM
ADDED : நவ 12, 2009 04:31 PM
இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் முதுநிலை பட்டப்படிப்பில் ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார். ஆனால், அத்துறையில் நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். உளவியல் துறையில் 2 ஆசிரியர்கள் உள்ளனர். உளவியல் துறையில் 24 இடங்கள் இருந்த போதிலும் ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார்.
6 ஆசிரியர்கள் உள்ள சமூகவியல் துறையில் 8 மாணவர்களே சேர்ந்துள்ளனர். அதேசமயம், தமிழ்த்துறையில் 89 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதையடுத்த நிலையில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளிலும் ஓரளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆங்கில மொழிப் பாடப்பிரிவில் 12 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு அக்டோபரில் 6 புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கியது. அதற்காக 25 ஆசிரியர்களை கடந்த டிசம்பரில் தேரவு செய்தது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட படிப்புகள் மாணவர்களை ஈர்க்கத் தவறிவிட்டது. சேலத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் ஆங்கிலமும் இதழியலும் மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ள நிலையில், பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்புகளில் சேர மாணவர்கள் முன்வராமல் இருப்பதற்கான காரணம் புரியவில்லை.
