தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயல்வழிக்கற்றல்: கோவா கல்வியாளர்கள் ஆய்வு

செயல்வழிக்கற்றல்: கோவா கல்வியாளர்கள் ஆய்வு

செயல்வழிக்கற்றல்: கோவா கல்வியாளர்கள் ஆய்வு


UPDATED : நவ 13, 2009 12:00 AM

ADDED : நவ 13, 2009 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2009 12:00 AM ADDED : நவ 13, 2009 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவா மாநிலத்தைச்சேர்ந்த ஆர்ச் டையஷன் போர்டு ஆப் எஜூகேசன் நிர்வாகிகள் கேப்ரியோல், டினோ மற்றும் யுவெட் ஆகியோர் அடங்கிய கல்வியாளர் குழுவினர்,  ஆனைமலை அடுத்த மயிலாடுத்துறை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் செயல்வழிக்கற்றல் பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்தனர். பள்ளியில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை, மாணவர்களின் கற்கும் திறன், விளையாட்டு முறையில் மாணவர்கள் பாடங்களை உள்வாங்கும் திறன் குறித்து சோதித்தனர்.

அப்போது, மாணவர்களிடம் அடிப்படை கணக்குகளை போடுமாறும், வரைபடத்தில் முக்கியப்பகுதிகளை அடையாளப்படுத்தி காட்டுமாறும் வலியுறுத்தினர். புத்தகத்தில் சில கதைகளை கூறியபோது, மாணவர்கள் உடனடியாக நடித்துக்காட்டி நாடகக்திறனை வெளிப்படுத்தினர்.


இதன் பின், குமரன் கட்டம், துறையூர், அரசூர் மற்றும் கம்பாலபட்டி உள்ளிட்ட துவக்கப்பள்ளிகளிலும் குழுவினர் ஆய்வு செய்தனர். எஸ்.எஸ்.ஏ., திட்ட கவுரவ ஆலோசகர் விஜயகுமார், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.கோவா கல்விக்குழுவினர் கூறியதாவது:
 
துவக்கப்பள்ளி மாணவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடும்போது, உடனடியாக எளிய வார்த்தைகளை பயன்படுத்தி பதிலளிக்கின்றனர். படித்து முடித்தவுடன் என்னவாக வருவீர்கள் என இரு மாணவர்களிடம் கேட்டபோது, டாக்டர் மற்றும் ஐ.ஏ.ஏஸ்., அதிகாரியாக வருவேன் என உடனடியாக அவர்கள் பதில் அளித்தனர்.இப்போதே எதிர்காலத்தை பற்றி திட்டமிடும் வகையில் கல்வித்திட்டம் இருப்பது வரவேற்கத்தக்கது. இதுகுறித்து, எங்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி, கோவாவிலுள்ள பள்ளிகளில் வரக்கூடிய கல்வியாண்டில் செயல்வழிக்கற்றல் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us