தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழங்குடி மாணவர்களின் கல்வித் தரம்: என்.சி.இ.ஆர்.டி., ஆய்வு

பழங்குடி மாணவர்களின் கல்வித் தரம்: என்.சி.இ.ஆர்.டி., ஆய்வு

பழங்குடி மாணவர்களின் கல்வித் தரம்: என்.சி.இ.ஆர்.டி., ஆய்வு


UPDATED : நவ 13, 2009 12:00 AM

ADDED : நவ 13, 2009 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2009 12:00 AM ADDED : நவ 13, 2009 11:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவுத்தம்பதி, சின்னாம்பதி, ஆனைகட்டி பாலமலை பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை, பேராசிரியர்கள் நீரஜா சுக்லா, தினேஷ் வர்மா, சவுகான், கானன் சாது அடங்கிய என்.சி.இ.ஆர்.டி., குழுவினர் பார்வையிட்டனர்.
இப்பள்ளிகளில், செயல்வழிக் கற்றல் கல்வி முறைகளை பழங்குடியின மாணவர்கள் எப்படி படிக்கின்றனர் என்பதை கண்டறிந்தனர்; குறைகளையும் கேட்டறிந்தனர்.


பேராசிரியர் நீரஜா சுக்லா கூறியதாவது: பழங்குடியின மாணவர்களின் மொழி வேறு. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பிக்கும் மொழி வேறு. ஆசிரியர்கள் கற்பிக்கும் மொழியில் மாணவர்களை பாடங்கள் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்கிறோம். இதற்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம்.
 
ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கல்வி முறை, பழங்குடியின மாணவர்களை எளிதில் சென்றடையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரம் பற்றி ஒரிசா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் ஆய்வு பணிகளை முடித்து விட்டோம். விரைவில் கேரளா செல்லவுள்ளோம். இவ்வாறு நீரஜா சுக்லா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us