தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நூலகங்களில் மாணவர்கள் சேர்க்கை: 30ம் தேதி வரை கட்டண சலுகை

நூலகங்களில் மாணவர்கள் சேர்க்கை: 30ம் தேதி வரை கட்டண சலுகை

நூலகங்களில் மாணவர்கள் சேர்க்கை: 30ம் தேதி வரை கட்டண சலுகை


UPDATED : நவ 14, 2009 12:00 AM

ADDED : நவ 14, 2009 08:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2009 12:00 AM ADDED : நவ 14, 2009 08:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நூலக வார விழாவின்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளை உறுப்பினராக்கும் திட்டம் முனைப்புடன் செயல் படுத்தப்பட உள்ளது.

உறுப்பினர்களாக சேர விரும்பும் மாணவ மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரிடம் படிப்பு சான்று பெற்று தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பொது நூலகத்தில் உறுப்பினராக சேரலாம்.
உறுப்பினராகும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் முதலாம் ஆண்டு சந்தா செலுத்துவதிலிருந்து 100 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும்.இச்சலுகை திட்டம் 14ம்தேதியிலிருந்து 30ம் தேதி வரை செயல்படுத்தப்படும்.

நூலக வார விழாவையொட்டி மாணவ மாணவிகளுக்கிடையே ஜனவரி மாதம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, நூலக விழிப்புணர்வு வாசகங்கள் போட்டி நடைபெறும். ஜனவரி மாதம் 8ம் தேதி வட்ட அளவில் போட்டிகள் நடைபெறும்.
இதில் முதலிடம் பெறுபவர்களுக்கு 22ம் தேதி மாவட்ட அளவில் போட்டி நடைபெறும். 29ம் தேதி மாநில அளவிலானப் போட்டிகள் நடைபெறும்.

இதில் முதலிடங்களைப் படிக்கும் மாணவர்கள் சிங்கப்பூர் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். இரண்டாம் இடம் பிடிப்பவர்கள் இந்திய அளவிலான சுற்றுலாவிற்கும், மூன்றாம் இடம் பிடிப்பவர்கள் தமிழக அளவிலான சுற்றுலாவிற்கும் அழைத்து செல்லப்படுவர்.போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் பொது நூலகத்துறை நூலகங்களில் கண்டிப்பாக உறுப்பினராக இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us