அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
UPDATED : நவ 14, 2009 12:00 AM
ADDED : நவ 14, 2009 08:48 AM
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டம், கடந்த 11ம் தேதி சென்னையில் நடந்தது. நடப்புக் கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கள் முடுக்கி விட வேண் டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இது பற்றி விளக்க கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் கல்வி மாவட்டங் களில் உள்ள அரசு, மாநகராட்சி, அரசு உ<தவி பெறும் பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டம், கோவை பிரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்த சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் அதற்கான காரணம் கேட்கப்பட்டது.
கூட்டத்தில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பேசுகையில், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை விட நடப்புக் கல்வியாண்டில் கூடுதல் சதவீத தேர்ச்சி பெற வேண்டும்.
மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது, வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் விதத்தை கண்காணிப்பது, படிப்பில் பலவீனமான மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இது பற்றி, முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகளில் கோவை மாவட்ட சராசரி தேர்ச்சி 80 சதவீதம். கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகளில் 80 சதவீதத்துக்கு கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், பாடம் கற்பிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண் டும் என்றும், வரும் கல்வியாண்டில் இப்பள்ளிகள் 95 சதவீத தேர்ச்சி காண்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் மொத்தம் 58 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பெரும்பாலும் அறிவியல் பாட ஆசிரியர் பணியிடங்களே காலியாக உள்ளன. காலி பணியிடங்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, காலி பணியிடங்களை நவ., 30க்குள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப வேண்டும் என, மாநில பெற்றோர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்புகளை படித்து விட்டு வேலைக்கு காத்திருப்போர், தங்கள் அருகில் உள்ள பள்ளிகளையோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு காலி பணியிட நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். பெற்றோர் ஆசிரியர் சங்க ஆசிரியராக அப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் பணியில் சேருபவர்களுக்கு மாதம் 2,500 ரூபாய் சம் பளம் அளிக்கப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை பணிபுரியலாம். இவ்வாறு ஆனந்தி கூறினார்.
