UPDATED : நவ 14, 2009 12:00 AM
ADDED : நவ 14, 2009 10:11 AM
1989ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார். பிரிட்டனில் உயர்கல்வியை முடித்தவுடன், சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் கைகோர்த்தார். சுதந்திரத்துக்கு பின், பிரதமர் பதவி அவரை தேடி வந்தது.
குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்று வைத்திருந்தார். தேசம் என்ற தோட்டத்தின் மொட்டுகள் என குழந்தைகளை குறிப்பிட்டார். பெரியவர்கள் ஜாதி, மதம், தேசம், மொழி, இனம், நாடு என தங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திக்கொள்கின் றனர். குழந்தைகளுக்கு இது போன்ற தடைகள் இல்லை. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக விளங்குவது அந்நாட்டின் குழந்தைகளே. இதில் ஆண், பெண் பாகுபாடு கூடாது என்பது அவரது கருத்து.
அவரது பணிகளுக்கு இடையே அவ்வப்போது குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடி மகிழ்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். அவரது ஆட்சியின் போது நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர்கல்வி நிறுவனங்கள் நேருவின் காலத்தில் தான்உருவாக்கப்பட்டன.
குழந்தைகள் மீதான நேருவின் அன்பை நினைவுகூறும் வகையில் தான் அவரது பிறந்த தினம்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் குழந்தைகள் தினத்தில் மாணவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
