படிக்கும் போது திட்டமிடல் இருந்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம்!
படிக்கும் போது திட்டமிடல் இருந்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம்!
UPDATED : நவ 15, 2009 12:00 AM
ADDED : நவ 15, 2009 09:01 AM
பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எதிர் கொள்ளும் விதம் குறித்து ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள் விபரம்.
பத்தாம் வகுப்பு:
ஆங்கிலம்-பாண்டியன்(அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகபட்டி):
முதல் நான்கு பாடங்களை படித்தால் கூடுதல் மார்க் பெற முடியும். கட்டுரை சொந்த நடையில் எழுதுவதால் அதிக மார்க் கிடைக்கும். போயம் பகுதியை அடிக்கடி எழுதிப்பார்க்க வேண்டும். துணைப்பாடத்தை முழுவதும் படித்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அறிவியல்-வெற்றிவேல்(அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பெரியகுளம்):
பாஸ் செய்வதற்கு சிரமப்படும் மாணவர்கள் உயிரியல் பகுதியை மட்டும் படித்தால் போதும் 50 மார்க் வரை பெறலாம். படங்களில் பாகம் அவசியம் குறிக்க வேண்டும். பண்புகள், பயன்கள் தொடர்பான கேள்விகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இயற்பியல் பகுதியில் தேவையான இடங்களில் அலகு அவசியம் குறிப்பிட வேண்டும்.
கணிதம்-சரஸ்வதி(வி.நி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்):
கணக்கை புரிந்து படித்தால் நூறு மார்க் எளிதில் பெறலாம். சூத்திரம், வரையரை முக்கியம். செய்முறை வடிவியல் பகுதியில் வட்ட நாற்கரம், வடிவியல் பகுதியில் உதவிப்படம், அலகு முக்கியம்.விதிகள் தொடர்பான கணக்குகளுக்கு முக்கியத் துவம் தர வேண்டும்.
சமூக அறிவியில் -ரோஸ்லின்மேரி(அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம்):
விரிவான வினாக் களை படிக்கும்போது சிறு குறிப்புகள் எடுத்து வைத்து படிக்க வேண்டும். புவியியல் வரைபடத்தில் பருத்தி விளையும் பகுதி, இருப்பு பாதை இவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை, அண்டை நாடுகளுடனான உறவு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.
பிளஸ் டூ
ஆங்கிலம்-கருணாகரன்(அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்):
பாடப்புத்தகத்தின் உரைநடை, போயம் ஆகியவற்றின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சிறு குறிப்புகளை படிக்க வேண்டும். போயம் பகுதியில் அதிக தவறு கூடாது. இரண்டாம் தாளில் உள்ள அனைத்து சிறு கதைகளையும் படிக்க வேண்டும்.
இயற்பியல்-நடேசன்(அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளி, குன்னூர்):
மூன்று மார்க் வினாக்களில் நான்கு எடுத்துக்காட்டு கணக்குகளும், ஐந்து மார்க் பகுதியில் இரண்டு எடுத்துக் காட்டு கணக்குகளும் வரும். எல்லா பாடங்களிலும் உள்ள விதிகள் தொடர் பான கேள்விகளை படிக்க வேண்டும்.
கணிதம்-தினகரன் (ஸ்ரீவ.வே.மேல்நிலைப்பள்ளி,வெங்கடாஜலபுரம்):
தற்போது நுழைவுத்தேர்வு இல்லாததால் கணிதத்தில் ஒவ்வொரு மார்க்கும் முக்கியம் பெறுகிறது. இருநூறு மார்க் எடுக்க குறைந்தது நான்கு மாதிரி தேர்வுகளை எழுதி திருத்தி பழகிக்கொள்ள வேண்டும். சூத்திரங்களை எழுதி பழக வேண்டும். முதல் தொகுதியில் மட்டும் 130 மார்க்குகள் இடம் பெறுவதால் நான்கு பாடங்களும் முக்கியம் பெறுகிறது.
வேதியியல்-சின்னராஜா (அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகபட்டி):
சமன்பாடுகளை புரிந்து திரும்ப திரும்ப எழுதிப்பார்க்க வேண்டும். டி-தொகுதி, எப்-தொகுதி தனிமங்கள், திட நிலைமை, வெப்ப இயக்கவியல், ஈத்தர்கள், உயிர் மூலக்கூறுகள், நடைமுறை வேதியியல் இவற் றில் உள்ள முக்கிய வினாக்களை படித்தால் கூடுதல் மார்க் பெறலாம்.
தாவரவியல்-வெங்கடேஷ்குமார்(அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம்):
வகைப்பாட்டியல், தாவர உயிர்செல்லியல் பாடங்களில் அதிக மார்க் பெற முடியும். தாவரங்களின் இரு சொல் பெயர் எழுத வேண் டும். படம் உள்ள கேள்விகளுக்கு படம் வரைந்து பாகம் குறித்து பின் விளக் கம் எழுத வேண்டும். முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களை கொண்டு தேர்வு பயிற்சி செய்வதால் அதிக மார்க் பெறலாம்.
விலங்கியல்- ராஜேஸ்வரி (அரசு மேல்நிலைப் பள்ளி, ஜி.கல்லுப்பட்டி):
முதல் பாடம் நன்கு படித்தால் 35 சத மார்க் பெறலாம். ஒரு மார்க் கேள்விகளை அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். தேவையான இடங்களில் படம் அவசியம் வரைய வேண்டும். இவ்வாறு ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சிகளை எம்.எஸ்.தண்டபாணி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியை இணைந்து வழங்கியோர்: எஸ்.ஆர்.எம்., பல்கலை., பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி ஆண்டிபட்டி, ஓட்டல் உட்லண்ட்ஸ் பெரியகுளம், நேசம் தொண்டு நிறுவனம், டி.கள்ளிப்பட்டி, கல்வி இன்ஸ்டியூட்(பி) லிட்., பெரியகுளம்.
