தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைக்கு் பதிவு செய்தவர்கள் 50 லட்சம் பேர்!

வேலைக்கு் பதிவு செய்தவர்கள் 50 லட்சம் பேர்!

வேலைக்கு் பதிவு செய்தவர்கள் 50 லட்சம் பேர்!


UPDATED : நவ 15, 2009 12:00 AM

ADDED : நவ 15, 2009 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2009 12:00 AM ADDED : நவ 15, 2009 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கான உதவித் தொகையாக, தமிழக அரசு 240 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

படித்த இளைஞர்களை அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கும் வகையில், மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு வேலைக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகரித்து வந்தாலும், சொந்தமாக தொழில் துவங்க வங்கி கடன், மானியம் என பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், அரசு பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வரும் இளைஞர்களின் கூட்டம் மட்டும் குறைந்த பாடில்லை.அரசு வேலை என்றால், நேரத்திற்கு பணி, மாதாந்திர ஊதியம், ஏராளமான லீவு மற்ற பிற சலுகைகள் கிடைக்கும் என்ற எண்ணம் இளைஞர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்க, அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையையும் அரசு வழங்கி வருகிறது. இந்த வகையில், ஆண்டிற்கு பல கோடி ரூபாய் செலவழிக்கப் படுகிறது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ள தகவல்கள்: தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் மொத்தம் 36 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதம் வரை 4 லட்சத்து 48 ஆயிரத்து 333 இளநிலை பட்டதாரிகளும், 2 லட்சத்து 95 ஆயிரத்து 806 மேல்நிலை பட்டதாரிகளும், 15 ஆயிரத்து 186 மருத்துவ பட்டதாரிகளும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 809 பொறியியல் பட்டதாரிகளும், 2 லட்சத்து 45 ஆயிரத்து 444 பட்டயக் கல்வி முடித்தவர்களும், 2 லட்சத்து 45 ஆயிரத்து 892 தொழிற்கல்வி(ஐ.டி.ஐ.,) படித்தவர்களும், வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.

பள்ளிக் கல்வி மட்டுமே முடித்தவர்கள், 34 லட்சத்து 4 ஆயிரத்து 149 இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வகையில், மொத்தம் 47 லட்சத்து 71 ஆயிரத்து 619 பேர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 75 ஆயிரத்து 400 பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றால், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 150 ரூபாயும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், பட்டதாரிகளுக்கு மாதம் 300 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு இந்த தொகை வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 801 வேலை இல்லா இளைஞர்களுக்கு அரசு 239 கோடியே 91 லட்சத்து 20 ஆயிரத்து 612 ரூபாய் உதவித் தொகை வழங்கியுள்ளது.இவ்வாறு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us