தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆறாம் வகுப்பு முதல் சயின்ஸ் லேப்: முன்னாள் துணைவேந்தர் யோசனை

ஆறாம் வகுப்பு முதல் சயின்ஸ் லேப்: முன்னாள் துணைவேந்தர் யோசனை

ஆறாம் வகுப்பு முதல் சயின்ஸ் லேப்: முன்னாள் துணைவேந்தர் யோசனை


UPDATED : நவ 16, 2009 12:00 AM

ADDED : நவ 16, 2009 08:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2009 12:00 AM ADDED : நவ 16, 2009 08:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் கல்வி பற்றிய கருத்தரங்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார் பில்,  தாமஸ் கிளப்பில் நடந்தது.

கருத்தரங்கில், கோவை வேளாண் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி பேசியதாவது:

அறிவியல் தான் வாழ்க்கையின் அடிப்படை. அறிவியல் தொழில் நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் நாடே, வளர்ந்த நாடு. மனித வாழ்வின் வளர்ச்சி மற்றும் கலாசார வளர்ச்சிக்கு அறிவியலே அடிப்படை. கடந்த 1990க்குப் பின் அறிவியல் தொழில் நுட்பமும், தகவல் தொழில் நுட்பமும் வந்த பின்னரே இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

இன்று, உலகளவில் அதிக மொபைல் போன் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ள சமச்சீர் கல்வி பற்றிய சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. தமிழகத்தில் ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தை படித்து வெளியேறும் மாணவனால், மருத்துவம் அல்லது பொறியியல் தவிர வேறு எந்த படிப்பிலும் சேர முடியாது. ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு படிப்புகளாக இருப்பதால், பொது நுழைவுத் தேர்வுகளில் நம் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமமாக உள்ளது.

 வி.ஐ.டி., உள்ளிட்ட சில பல்கலைகளில் வடமாநில மாணவர்களின் ஆதிக்கம் அதிகம். தமிழக மாணவர்களால் அந்த பல்கலைகளில் சேர முடியவில்லை.விரைவில் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளதால், அந்நிறுவனங்களில் சேருவதற்கு ஏற்ற திறனை நமது பள்ளி மாணவர்களிடம் உயர்த்த வேண்டும். ஆசிரியரை பார்த்து கேள்வி கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் தைரியம் மாணவனுக்கு வர வேண்டும்.

மதிப்பெண்களின் அடிப்படையில் ரேங்க் நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும். இது மாணவர்களின் திறனை குறைப்பதால், சமச்சீர்  கல்வியில் கிரேடு முறையை அமல்படுத்த வேண்டும்.பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் சயின்ஸ் லேப் நிறுவ வேண்டும். வாரம் ஒரு பரிசோதனை என்ற முறையில், 30 வாரங்களில் 30 அறிவியல் பரிசோதனைகளை மாணவர்கள் கற்றுக் கொள்வர்.

ஒன்றிய அளவில் அறிவியல் கண்காட்சிகளை நடத்த வேண்டும். கணிதம், அறிவியல் பாடங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதால், இப்பாடங்களில் மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம். இந்த தேவைகள் அனைத்தும் உள்ளடக்கியதாக சமச்சீர் கல்வி இருக்க வேண்டும்.இவ்வாறு, ராமசாமி பேசினார்.

கருத்தரங்கில், அறிவியலில் பெண்கள் எனும் நூலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் ஸ்டீபன்நாதன் பெற்றுக் கொண்டார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சுப்ரமணியம், மாவட்டத் தலைவர் நடராஜன், செயலாளர் முகமது பாதுஷா, பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உட் பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us