தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு சிங்கப்பூர் சுற்றுலா வாய்ப்பு!

மாணவர்களுக்கு சிங்கப்பூர் சுற்றுலா வாய்ப்பு!

மாணவர்களுக்கு சிங்கப்பூர் சுற்றுலா வாய்ப்பு!


UPDATED : நவ 17, 2009 12:00 AM

ADDED : நவ 17, 2009 12:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2009 12:00 AM ADDED : நவ 17, 2009 12:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு


இது குறித்து நூலக அலுவலர் (பொறுப்பு) யுவராஜ் வெளியிட்ட அறிக்கை:


தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கான நூலக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அடுத்த ஆண்டு ஜனவரியில் பல்வேறு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாலுகா அளவில் 2010 ஜனவரி 8ம் தேதியும், அதே மாதம் 22ம் தேதி மாவட்ட அளவிலும், 29ம் தேதி மாநில அளவிலும் போட்டி நடத்தப்படும்.
 
அது குறித்த தகவல் அனைத்தும், நூலக பொது தகவல் பலகையில் வெளியிடப்படும். இந்த போட்டியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.

போட்டியில் பங்கேற்கும் நபர் நூலக உறுப்பினராக இருத்தல் வேண்டும். போட்டி நடக்கும் இடத்தில் படிப்புச்சான்று, உறுப்பினராக சேர்ந்த சான்று காட்ட வேண்டும். அதன்படி, என்னை செதுக்கிய நூல், படித்தேன் உயர்ந்தேன், உலகிற்சிறந்த நூல்கள் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் ஏழு நிமிடங்கள் பேச அனுமதிக்கப்படுவர்.

பேச வரும் சமயம் மூன்று தலைப்புகள் தரப்படும். அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஒரு தலைப்பில் பேச வேண்டும். அதுபோல் நமது உலகம் நூலகம், அறிவால் உயர்வோம், நாளும் நூலகம் செல்வோம், கற்க வேண்டிய செந்தமிழ் நூல்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டியும், 200 சொற்களுக்கு மிகாமலும் ஒரு மணி நேரமும் எழுத வேண்டும். போட்டி நடக்கும் சமயங்களில் தலைப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

நூலக விழிப்புணர்வு வாசகங்கள் போட்டியில், நூலகங்கள் பற்றியும், நூல் படித்தல் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவியர் எழுதித்தர வேண்டும். ஒருவர் அதிக பட்சம் ஐந்து வாசகங்களை மட்டும் எழுதினால் போதும். புதுமையான மற்றும் பொருள் நிறைந்த வாசகங்களை எழுதும் எண்ணிக்கை அடிப்படையில் மூவர் தேர்வு செய்யப்படுவர்.
 
பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, நூலக விழிப்புணர்வு வாசகங்கள் இம்மூன்று போட்டிகள் முதலில் வட்ட அளவில் நடத்தப்படும். ஒவ்வொரு போட்டியிலம் மூவர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் மாவட்ட அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
 
அதில் தேர்வு செய்யப்படும் மூவர் சிங்கப்பூர் சுற்றுலாவும், அடுத்த மூவர் இந்திய சுற்றுலாவும், அதற்கடுத்த மூவர் தமிழக சுற்றுலாவும் இலவசமாக அழைத்து செல்லப்படுவர். பள்ளி மாணவ, மாணவியர், தலைமை ஆசிரியரிடம், படிப்புச்சான்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரி முதல்வரிடம் படிப்புச்சான்று பெற்று பொது நூலகங்களில் கொடுத்து உறுப்பினராக இம்மாதம் 30ம் தேதிக்குள் சேர்ந்தால், முதலாம் ஆண்டு சந்தா செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us