தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ரிக்., பள்ளிகள், சீனர்களை கவர்ந்த செயல்வழிக் கற்றல்

மெட்ரிக்., பள்ளிகள், சீனர்களை கவர்ந்த செயல்வழிக் கற்றல்

மெட்ரிக்., பள்ளிகள், சீனர்களை கவர்ந்த செயல்வழிக் கற்றல்


UPDATED : நவ 17, 2009 12:00 AM

ADDED : நவ 17, 2009 12:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2009 12:00 AM ADDED : நவ 17, 2009 12:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் இப்புதிய முறையில் வார்த்தைகள், படங்களை வண்ண வண்ண அட்டைகளைக் கொண்டு குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்கின்றன. இம்முறைக்கு பெரிதும் வரவேற்பு உள்ளது.


இதையடுத்து இம்முறையை அறிந்து கொள்ள மெட்ரிக்., பள்ளிகளின் ஆசிரியர்களிடையேயும் ஆர்வம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சில மெட்ரிக்., பள்ளிகளின் ஆசிரியர்கள் மதுரை மேற்கு யூனியனில் உள்ள ஆலாத்தூர் உள்பட சில ஊர்களில் உள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்தனர். இதில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் மூலம் குழந்தைகள் எளிதில் கற்பதை அறிந்து கொண்டனர். இதையடுத்து கற்றல் அட்டைகளை மெட்ரிக்., பள்ளிகளுக்கும் தரவேண்டும் என அனைவருக்கும் கல்வித் திட்ட உயரதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன், சீனாவை சேர்ந்த 19 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழுவும், சென்னை, மதுரை, கோவையில் உள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு விசிட் செய்தது. அவர்களையும் செயல்வழிக் கற்றல் முறை வெகுவாக கவர்ந்துள்ளது. பின், கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்த அவர்கள், இதனை தங்கள் நாட்டிலும் செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து அனைவருக்கும் கல்வி திட்ட முன்னாள் இயக்குனரும், கல்வி ஆலோசகருமான விஜயகுமாரிடம் கேட்டபோது, செயல்வழிக் கற்றல் முறை அனைவரையும் கவர்ந்திருப்பது உண்மைதான். சீனா உட்பட பல நாடுகளில் சாதாரண கற்றல் முறையே உள்ளதால் செயல்வழிக் கற்றல் முறையில் ஆர்வம் காட்டுகின்றனர். இம்முறையை மற்ற பள்ளிகள், நாடுகளிலும் செயல்படுத்த நாம் ஒத்துழைப்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us