UPDATED : நவ 17, 2009 12:00 AM
ADDED : நவ 17, 2009 01:12 PM
அ நிறம் | அளவு
இதில் சிவகங்கை அலீஸ் மில்லர் மகளிர் உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி பிரியங்கா மாநில அளவில் முதல் இடத்தை பெற்றார்.
சென்னையில் நடந்த விழாவில் நிதி அமைச்சர் அன்பழகன் இவருக்கு பரிசு வழங்கினார். சிக்கனம் குறித்து இம்மாணவி என்ன சொல்கிறார்?. அவர் கூறியதாவது:
உருவத்தில் சிறிதான எறும்பு உணவை மழை காலங்களுக்கு முன்பே சேமித்து வைக்கிறது. சிந்திக்கும் திறன் உள்ள மனிதர்கள் எதிர்கால, எதிர்பாராத செலவுகளுக்காக சேமிக்க வேண்டும். குறிப்பாக மாணவ பருவத்தில் சேமிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். திண்பண்டங்கள் வாங்க பெற்றோர் தரும் பணத்தை பள்ளியில் உள்ள சேமிப்பு திட்டங்களில் சிறிய அளவில் சேர்க்க வேண்டும். வெளியிடங்களில் சுகாதாரமற்ற பொருட்களை திண்பதால் தொற்று நோய்கள் ஏற்பட்டு, கல்வி தடைபடும்.
சேமிப்பதால் எதிர்பாராத செலவுகளுக்கு, பணம் தேடி அலைய தேவையில்லை. ஏழை குடும்பம் என்பதால், சிறு வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை பெற்றோர் கற்று கொடுத்தனர். பள்ளி சேமிப்பு திட்டத்தில் சேர்த்து வைத்துள்ள பணத்தை எதிர்கால கல்வி, பெற்றோரின் செலவுகளுக்காக வைத்துள்ளேன். சேமிக்கும் பழக்கத்தை குழந்தை பருவத்தில் இருந்தே பெற்றோர் கற்று கொடுக்க வேண்டும்.
இப்பழக்கம் வந்து விட்டால் வீண் செலவு செய்யும் மனப்பான்மை வராது. தீய பழக்கங்களில் ஈடுபட மனம் வராது. தந்தை கூலி தொழிலாளர் என்பதால் சிக்கனத்தின் அருமைமை உணர்ந்தேன். தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கி, மேலும் சேமிக்க திட்டமிட்டுள்ளேன். பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறுவதே எனது லட்சியம். எனக்கு கிடைத்த பரிசு போல, அனைத்து மாணவர்களும் பெற வேண்டும். சேமிப்பால் நாமும் முன்னேற முடியும், நாடும் உயரும் என்றார்.
