தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காப்பீடு செய்தால் தான் கல்விக்கடன்: மாணவர்கள் அதிர்ச்சி!

காப்பீடு செய்தால் தான் கல்விக்கடன்: மாணவர்கள் அதிர்ச்சி!

காப்பீடு செய்தால் தான் கல்விக்கடன்: மாணவர்கள் அதிர்ச்சி!


UPDATED : நவ 18, 2009 12:00 AM

ADDED : நவ 18, 2009 12:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2009 12:00 AM ADDED : நவ 18, 2009 12:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வங்கிகளில் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்விக்கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக பட்சமாக 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கலாம். வெளி நாடுகளில் படிப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கலாம். இதில் 4 லட்சம் வரை எந்தவித பிணையமும் இல்லாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.


 4
லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை தனி நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் கடன் பெறும் போது, சொத்து ஜாமீன் வழங்க வேண்டும். கல்விக்கடன் வழங்க இதை தவிர வேறு எதையும் நிபந்தனையாக விதிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகள் அனைத்தும் தற்போது ஆயுள் காப்பீடு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து காப்பீடு முகவர்களாக உள்ளது. கல்விக்கடன் கேட்டு வரும் மாணவர்களிடம், கடன் தொகை தயாராக உள்ளது. ஆனால், எங்களது வங்கியில் காப்பீடுக்கு 12 ஆயிரம் ரூபாய் கட்டிய பிறகு கடன் தொகையை வாங்கி செல்லுங்கள், என நிபந்தனை விதிக்கின்றனர். ஒவ்வொரு வங்கியும் ஒரு குறிப்பிட்ட தொகை காப்பீட்டுக்காக கட்டிய பிறகே கல்விக்கடன் வழங்குகின்றன.


கல்விகட்டணங்களை கட்டமுடியாமல் உள்ள நடுத்தர, ஏழை மாணவர்களே வங்கிகளில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கின்றனர். இவர்களது வாழ்க்கைதரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கிலேதான் நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள், முதலில் கடன் வாங்கி கல்லூரிகளுக்கு கட்டணம் கட்டி விடுகின்றனர். பின்னர் வங்கிகள், கல்லூரி பெயரில் வழங்கும் செக்குகளை கொடுத்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பணமாக பெற்று, வட்டி கடனை கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். கண்டிப்பாக காப்பீடு செய்யவேண்டும் என வங்கிகள் தற்போது நிபந்தனை விதிப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வங்கியில் கல்விக்கடன் கிடைப்பது அரிது. அப்படி கிடைத்தாலும் இது போன்ற நிபந்தனைகள் விதிப்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும்.


பாதிக்கப்பட்ட பெற்றோர் ஒருவர் கூறுகையில், வங்கிகள் பங்குசந்தை, பல்வேறு விதமான காப்பீடுகள் வைத்துள்ளது. இந்த காப்பீட்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து பணம் கட்டினால் தான் கல்விக்கடன் வழங்கப்படும் என்கிறது. காப்பீடு செய்யும் அளவிற்கு பணம் இருந்தால் நாங்கள் ஏன் கல்விக்கடன் வாங்குகிறோம் என்றார்.

முன்னோடி வங்கி மேலாளர் சுகுமார் கூறுகையில், ஒரு சில வங்கிகளில் இது போன்று திட்டங்கள் இருக்கலாம். அனைத்து வங்கிகளிலும் காப்பீடு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை. எந்த வங்கி நிபந்தனை விதிக்கிறது என்று எனது கவனத்திற்கு தெரிவித்தால், அந்த வங்கியிடம் நிர்ப்பந்திக்க கூடாது என தெரிவிக்கிறேன் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us