தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விதிமுறைகளை மீறி செயல்பட்ட 28 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 28 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 28 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்


UPDATED : நவ 18, 2009 12:00 AM

ADDED : நவ 18, 2009 01:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2009 12:00 AM ADDED : நவ 18, 2009 01:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் கூறியதாவது:


அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கும் 28 பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களில் 276 பேர், தாங்கள் பணிபுரியும் கல்லூரிகளிலேயே முதுநிலை பட்டபடிப்பும் படித்து வருவது தெரிய வந்துள்ளது. ஒருவர் ஒரே நேரத்தில் முழுநேர விரிவுரையாளராகவும், மாணவராகவும் இருப்பது சாத்தியம் கிடையாது. இதற்கு பல்கலைக்கழக சிண்டிகேட்டும் அனுமதி தரவில்லை.

விதிமுறைகளை மீறி செயல்பட்ட இக்கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு, கடந்த 9ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்க, வரும் 20ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் தரும் விளக்கங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க, அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயபாலன் தலைமையில் ஐந்து நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, வரும் 30ம் தேதி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us