UPDATED : நவ 19, 2009 12:00 AM
ADDED : நவ 19, 2009 09:33 AM
இந்தியன் வங்கி மற்றும் அமெரிக்க - இந்திய கல்வி அமைப்பு இணைந்து, வெளிநாடுகளில் கல்வி வாய்ப்பு குறித்த கருத்தரங்கை சென்னை எம்.ஆர்.சி., நகர் இமேஜ் அரங்கில் நேற்று நடத்தியது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து, சிங்கப்பூர், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கல்வி வாய்ப்பு, கல்விக் கடன் மற்றும் விசா பெறுவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க துணை தூதர் ஆண்ட்ரூஸ் சிம்கின் பேசும் போது, அமெரிக்கா சென்று படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் அதிகம். இந்தியா வந்து படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியா - அமெரிக்கா உறவு மேம்படும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர் என்றார்.
இந்தியன் வங்கி தலைவர் சுந்தர்ராஜன் பேசும் போது, கல்வி வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே, இந்தியன் வங்கி மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4,900 மாணவர்களுக்கு 200 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குகிறோம் என்றார்.
