தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி பெறும் மாணவருக்கு குறுகிய கால பயிற்சி

உயர்கல்வி பெறும் மாணவருக்கு குறுகிய கால பயிற்சி

உயர்கல்வி பெறும் மாணவருக்கு குறுகிய கால பயிற்சி


UPDATED : நவ 22, 2009 12:00 AM

ADDED : நவ 22, 2009 06:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2009 12:00 AM ADDED : நவ 22, 2009 06:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி பாரதிதாசன் பல்கலை தொழில்நுட்ப பூங்கா, கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆஃப் இந்தியா திருச்சி வட்டம், இந்திராகாந்தி கல்லூரி மற்றும் திருச்சி தகவல் தொழில்நுட்பம் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் இணைந்து ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் தற்போதைய நிலையும், நுணுக்கங்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது.

விழாவுக்கு வந்தவர்களை கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆஃப் இந்தியா திருச்சி வட்ட சேர்மன் மாலுக் முகம்மத் வரவேற்றார். கருத்தரங்கம் குறித்து இந்திராகாந்தி கல்லூரி முதல்வர் மீனா பேசினார்.

தகவல், தொழில்நுட்பம் குறித்து தயாரிக்கப்பட்ட சிடியை வெளியிட்ட தமிழக முதன்மை செயலர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர் ஜெயக்கொடி பேசியதாவது: தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 12 சதமாக உள்ளது. இந்திய அளவில் பத்து முதல் 11 சதமாக உள்ளது. அடுத்த ஐந்தாண்டில் இதை 15 சதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 50 முதல் 75 சதமும், மிகவும் வளர்ந்த நாடுகளில் 75 சதமாக உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியேறுவோரில் 25 சதமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளியேறுவோரில் 10 சதம் பேருக்கு தான் மதிப்புமிக்க பணி கிடைக்கிறது. மாணவர்கள் தங்களது பாடம் மட்டுமல்லாது பன்முக திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக படிக்கும் போது வேலைவாய்ப்பை பெறும் நோக்கில் குறுகிய கால தொழில் பயிற்சியை பெற வேண்டும். இதற்கு கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து சான்றிதழ் படிப்பு வழங்க வேண்டும். நம்நாட்டு மொழிகள் மட்டுமல்லாது அயல்நாட்டு மொழியையும் மாணவர்கள் கூடுதலாக கற்றுக் கொள்ள வேண்டும். அறிவு, தொழில் நுட்பத்தால், தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.  இவ்வாறு தமிழக அரசின் முதன்மை செயலர்  ஜெயக்கொடி பேசினார்.

திருச்சி தகவல் தொழில்நுட்பம் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் சுகுமார், சாரநாதன் பொறியியல் கல்லூரி செயலாளர் ரவீந்திரன், கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆஃப் இந்தியா மண்டல துணைத் தலைவர் ராமநாதன் உள்ளிட்டோர் பேசினர். மண்டல அளவில் நடந்த கருத்தரங்கில் நான்கு மாவட்டங்களில் இருந்து 300க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். நிறைவில் பாரதிதாசன் பல்கலை தொழில்நுட்ப பூங்கா இயக்குனர் கோபிநாத் கணபதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us