ஜாதிச்சான்று இல்லாமல் படிக்க வழியின்றி தவிக்கும் குழந்தைகள்
ஜாதிச்சான்று இல்லாமல் படிக்க வழியின்றி தவிக்கும் குழந்தைகள்
UPDATED : நவ 23, 2009 12:00 AM
ADDED : நவ 23, 2009 08:09 AM
திண்டுக்கல், கொடைக்கானல், சிறுமலையில் உள்ள மலைக்கிராமங்களில் மலைவாழ், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் படிப்பதற்கும், ரேஷன் கார்டு, ரேஷன் பொருட்கள், மின், ரோடு வசதி உட்பட உட்பட பல்வேறு அத்தியாவசிய வசதிகளை பெறுவதற்கும் நக்சலைட் தடுப்பு போலீசார் உதவி செய்து வருகின்றனர்.
இவர்கள் மலைக்கிராம மக்களை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று மனு கொடுத்து தேவையான வசதிகளை பெற்றுத்தருகின்றனர். இங்குள்ள மலைக்கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மலைவாழ், பழங்
குடியினத்தவருக்கான ஜாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் பள்ளிகளுக்கு சென்று படிப்பை தொடர முடியாமல் தவிக்கின்றனர். நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் நடவடிக்கை இல்லை.
இது குறித்து திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார் கூறியதாவது: மலைக்கிராம குழந்தைகளுக்கு ஜாதிச்சான்று இல்லாத நிலையில் அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது குறித்து விசாரணை நடத்த ஆர்.டி.ஓ.,விற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஜாதிச்சான்று, ரேஷன் கார்டு உட்பட அனைத்து வசதிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
