UPDATED : நவ 23, 2009 12:00 AM
ADDED : நவ 23, 2009 10:11 AM
மாணவர்களுக்கு பட்டங்களை சாய்பாபா வழங்கினார். வழக்கமாக மாலையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழா இம்முறை காலையிலேயே நடந்தது. அமெரிக்க உள இயல் நிபுணர் டாக்டர் சாமுவேல் சாண்ட்வெய்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழா நடைபெற்ற குல்வந்த் மண்டபத்தை சாய்பாபா அதிகாலையிலேயே சுற்றிப் பார்த்து ஏற்பாடுகளை கவனித்தார். காலை 09:55 மணிக்கு பல்கலைக்கழக பதிவாளர் தலைமையில் பல்கலைக்ழக வேந்தரான சாய்பாபா ஊர்வலமாக மேடைக்கு அழைத்து வரப்பட்டார். சரியாக 10 மணிக்கு பட்டமளிப்பு விழா துவங்குவதாக சாய் பாபா அறிவித்ததும், மாணவர்களின் பட்டியலை துணை வேந்தர் படிக்க, அவர்களுக்கு பட்டங்களை சாய் பாபா வழங்கினார்.
4ம் நாள் நிகழ்ச்சிகள்: 4ம் நாளன்று 2009ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நாடகம் நடைபெற்றது. வித்யா அமிர்தம் என்ற இந்த நாடகத்தை பேராசிரியர் குருராஜா எழுதிய கதை அடிப்படையில் உருவாக்கி இருந்தனர். வழக்கமாக இந்த பட்டமளிப்பு விழா நாடகம் சாய் பாபாவின பிறந்த நாளுக்கு முதல் நாள் ( 22ம் தேதி) மாலை பூர்ண சந்திரா அரங்கில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு 21ம் தேதி மாலை குல்வந்த் மண்டபத்தில் 21ம் தேதி மாலை நடந்தது. நாடகத்தில் பேராசிரியராக நடித்த சித்தாந்த் சந்திரசேகர் என்ற மாணவனுக்கு சாய் பாபா தங்கச் சங்கிலி வழங்கி ஆசிர்வதித்தார். நாடகம் முடிந்த பிறகு நாடகக் கலைஞர்களுடன் சாய்பாபா சிறிது நேரம் உரையாடினார். அவர்களுக்கு சபாரி உடைகளை வழங்கினார். பின்னர் நாடகக் கலைஞர்கள் சாய்பாபாவின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
