தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிப்ரவரியில் அடிக்கல்

பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிப்ரவரியில் அடிக்கல்

பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிப்ரவரியில் அடிக்கல்


UPDATED : நவ 24, 2009 12:00 AM

ADDED : நவ 24, 2009 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2009 12:00 AM ADDED : நவ 24, 2009 10:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பெரம்பலூர், திருச்சி, கரூர் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்குபின் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் நெப்போலியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:


பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கண்காணிக்க, குறை களைய விழிப்புணர்வு மறறும் கண்காணிப்பு கமிட்டி எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மூன்று மாவட்டங்களின் கலெக்டர்கள் கமிட்டியின் செயலாளர்களாக உள்ளனர். எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர், யூனியன்குழு தலைவர்கள், தலித் ஒருவரும், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் உறுப்பினரும் இக்கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர்.


இந்த கமிட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூடி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் செயல்படுத்தவும், வளர்ச்சி பணிகள் எதுவரை நடந்துள்ளது. மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யும். பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. அதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது நடந்து வருகிறது.


இவ்வாறு அமைச்சர் நெப்போலியன் கூறினார். பேட்டியின்போது, கலெக்டர் விஜயகுமார், டி.ஆர்.ஓ., பழனிசாமி, எம்.எல்.ஏ., ராஜ்குமார், நகராட்சி தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us