தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இப்படி இருக்க வேண்டும் பொதுப் பாடத்திட்டம்

இப்படி இருக்க வேண்டும் பொதுப் பாடத்திட்டம்

இப்படி இருக்க வேண்டும் பொதுப் பாடத்திட்டம்


UPDATED : நவ 24, 2009 12:00 AM

ADDED : நவ 24, 2009 01:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2009 12:00 AM ADDED : நவ 24, 2009 01:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கான பொதுப் பாடத்திட்ட வரைவு தயாரிக்கும் பணியை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (என்.சி.இ.ஆர்.டி.,) மேற்கொண்டுள்ளது. அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் கீழ்த்திசை பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்கள் கொண்ட குழு தயாரித்த பொதுப் பாடத்திட்ட வரைவு பாது, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மீதான கருத்துகள் கேட்கப்பட்டு, அதற்கேட்ப மாறுதல்களும் செய்யப்படுகின்றன.


இந்நிலையில், பொதுப் பாடத்திட்டம் தயாரிப்பது குறித்த கருத்தரங்கம் பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் இப்பாடப் புத்தகம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், வல்லுநர்கள் பங்கேற்றனர். அப்போது, என்.சி.இ.ஆர்.டி., இயக்குநர் கிருஷ்ணகுமார் பொதுப் பாடத்திட்டம் அமைய வேண்டிய விதம் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.


அவை, இதோ...
தற்போதைய பாடத்திட்டத்தின்படி, ஒரு குழந்தை தினமும் 14 மணிநேரம் பாடப்புத்தகத்தை நம்பி படிக்கவேண்டியுள்ளது. சுதந்திரமாகவும், ஆச்சிரியப்பட்டும் கற்றுக்கொள்ளும் நிலை இல்லை. எந்த ஒரு பொருளையோ, இடத்தையோ, சம்பவத்தையோ பற்றி விளக்க வேண்டும் என்றால் அது குறித்த அனைத்து தகவல்களும் ஒரே பாடத்தில் தரப்படுகிறது.  உதாரணமாக, இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதன் வரலாறு குவியலாக தரப்படுகிறது. இவற்றை குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியுமா?


பாடங்கள் படிப்பதற்கு மென்மையாகவும், வயதுக்கு ஏற்ற வகையில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், அறிவு வளரும் வகையிலும் அமைய வேண்டியது அவசியம். பாடங்களை வரிசையாகத்தான் படிக்க வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும். பாடப்புத்தகத்தில் இரண்டாவது பாடத்தை முதலில் படித்து, பிறகு முதல் பாடத்தை படித்தாலும் எளிதில் புரியும் வகையில் அமைய வேண்டும். ஒரே தகவல்கள் அறிவியல், சமூக அறிவியல் எனப் பல பாடப்பிரிவுகளில் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் ஆசிரியர்களும் குழுவாக ஆலோசிக்க வேண்டும். கடந்த 1993ம் ஆண்டில் யஸ்பால் குழு சமர்ப்பித்த ‘லேர்னிங் வித்தவுட் பர்டன்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையின் சாராம்சத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.


மாணவரது சிந்தனைக்கு ஏற்ற வகையிலும், மாணவியின் சிந்தனை திறனுக்கு ஏற்பவும், அவர்களது பாலினத்திற்கு ஏற்ப பொதுவான பாடங்கள் அமையவேண்டும். அதேபோல், நாட்டின் எந்தஒரு பகுதியில், சுற்றுச் சூழலில் இருக்கும் மாணவ, மாணவியரும் கருத்துக்களை புரிந்து கொள்ளும் வகையில் அமைய வேண்டும். கடலோரப் பகுதியைச் சார்ந்த பாடங்கள் அதுபோன்ற பகுதியைச் சேர்ந்த மாணவருக்கு எளிதில் புரியும். நகரின் மையப்பகுதியில் வசிக்கும் மாணவரும் அதே புரிதலை பெறும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும். வரலாற்று பாடத்தில் அந்தந்த கிராமப்புறத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும், தகவல்களையும் மாணவர்கள் அறிந்துகொள்ளவும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.


மாணவர்கள் மத்தியில் குறிப்பாக சமூக, பொருளாதார தகவல்கள் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்காத வகையில் அமைய வேண்டும். செயல்முறையில் மாணவர்கள் தங்களை அனுபவப்படுத்திக் கொள்ளும் வகையில் பாடப் புத்தகங்களில் உரிய பகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.


கல்வி என்பது பாடப் புத்தகத்துடனே முடிந்து விடாமல், பாடப்புத்தகத்தை கடந்த விஷயமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். கல்வி கற்பதற்கு பாடப்புத்தகம் ஒரு துவக்கமாக இருக்க வேண்டும். வகுப்பறை, பள்ளி மற்றும் கிராமப்புறங்களில் பத்திரிக்கைகள், ஆய்வுகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான சிறந்த நூல்களைக் கொண்ட நூலகம் அமைய வேண்டும். பாடத்திட்டம் மாணவர்களுக்கு ஒரு நண்பனைப் போல அமைய வேண்டும். இவ்வாறு அமைந்தால், இந்த பொதுப் பாடத்திட்டம் நிச்சயம் சிறந்த தலைமுறையினரை கொடுக்கும். இவ்வாறு என்.சி.இ.ஆர்.டி., இயக்குநர் கிருஷ்ணகுமார் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us