தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமப்புற மாணவர்களின் திறமை: பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமிதம்

கிராமப்புற மாணவர்களின் திறமை: பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமிதம்

கிராமப்புற மாணவர்களின் திறமை: பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமிதம்


UPDATED : நவ 24, 2009 12:00 AM

ADDED : நவ 24, 2009 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2009 12:00 AM ADDED : நவ 24, 2009 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுச்சேரி அறிவியல் இயக்கமும், பள்ளிக் கல்வி இயக்கத்தின் மாநில பயிற்சி மையமும் இணைந்து 17வது குழந் தைகள் அறிவியல் மாநில மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.


மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 25 ஆய்வுத் திட்டங்களும் இம்மாநாட்டில் சமர்ப் பிக்கப்பட உள்ளன. இதில் தேர்வு செய்யப்படும் ஆறு திட்டங்களின் தலைவர் கள், டிச. 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை அகமதாபாத்தில் நடக்கும் 17வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பர்.

இம்மாநாட்டின் துவக்க விழா கல்வித்துறை வளா கத்தில் நடந்தது. விழாவிற்கு மாநில பயிற்சி மைய சிறப்பு அலுவலர் டாக்டர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்க தலைவரும், ஜிப்மர் பேராசிரியருமான சீனிவாசன் சிறப்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந் தினராக பள்ளிக்கல்வி இயக்குனர் டாக்டர் சுந்தர வடிவேலு மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது: அறிவியல் ஆய்வு என் பது நகரப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும் என்று கருதக்கூடாது.
 
கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கும் திறமை அதிகமாக உள்ளது. அதனை வெளிக் கொண்டு வருவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தும் போது, மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திறமையுடன் செயல்படுபவர்களை ஊக்கப்படுத்த முன் வரவேண்டும். ஊக் கப்படுத்துவதன் மூலம் அவர்கள் உலகம் போற்றும் அளவிற்கு சாதனை படைப்பார்கள். எனவே இம்மாநாட்டை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us