தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்காவில் படிக்க ஆசையா?

அமெரிக்காவில் படிக்க ஆசையா?

அமெரிக்காவில் படிக்க ஆசையா?


UPDATED : நவ 24, 2009 12:00 AM

ADDED : நவ 24, 2009 12:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2009 12:00 AM ADDED : நவ 24, 2009 12:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த அனுபவத்தை பெற விரும்புபவர்கள் அதிக செலவில்லாமல் கல்வி கற்பதற்கு எளிதான வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதன்படி தங்கள் பயண திட்டத்தை வகுத்துக் கொண்டால் நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தேவையான வாய்ப்புகள் ஏற்படும். இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று குறிப்பிட்ட காலம்வரை கல்வியை கற்றுமுடித்த பின்பு தாயகம் திரும்பும் வரை உள்ள செலவு விபரங்களை தெரிந்து கொள்வது நல்லது.

அமெரிக்காவில் எந்தெந்த பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி கற்பதற்கு தேவையான நிதி உதவியை வழங்குகின்றன என்பதை முன்னதாக தெரிந்து கொண்டு அந்த பல்கலை.,க்கு  விண்ணப்பிக்க வேண்டும்.

நாம் தேர்வு செய்யும் பல்கலை.,யில் இடம் கிடைப்பதற்காக மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை இருந்தால் அந்த பல்கலை.,க்கு விண்ணப்பம் அனுப்புவதை தவிர்த்து விட வேண்டும்.

நாம் அனுப்பும் விண்ணப்பம் பல்கலையில் கிடைப்பதற்கான கடைசி தேதி எது என்பதை தெரிந்து கொண்டு அந்த தேதியில் விண்ணப்பம் கிடைக்குமாறு செய்யாமல் அதற்கு முன்னதாக அனுப்பி வைப்பதோடு, விண்ணப்பம் கிடைத்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் நாட்களில் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களுக்கும் தெளிவான பதில்களை எழுதுவதோடு எந்த தகவல்களையும் புறக்கணிக்காமல் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். உரிய காலத்திற்குள் விண்ணப்பத்தினை அனுப்பி வைப்பதில் காலதாமதம் செய்யும் மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பினை அவர்களாகவே தவிர்த்துக் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.

அமெரிக்காவில் உள்ள அரசு சார்ந்த பல்கலை மற்றும் கல்லூரிகளின் கல்வி கட்டணம் தனியார் கல்வி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் குறைவானதாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு சார்ந்த கல்லூரிகளின் கல்வி கட்டணம் அந்தந்த கல்லூரிகளின் தகுதிக்கேற்ப வித்தியாசப்படும். இதை தெரிந்து கொண்டு நமது பொருளாதார நிலைக்கேற்ற கல்லூரிகளை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

ஒரு ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை நாம் நிர்ணயிக்கும்போது கல்லூரிக்கான கட்டணம், புத்தகங்கள் வாங்குவதற்கு தேவைப்படும் தொகை, அமெரிக்காவில் நாம் தங்கும் இடத்திலிருந்து கல்லூரிக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து கட்டணம், தங்கும் விடுதிக்கான மாதாந்திர வாடகை, உணவு, மருத்துவ செலவு, பொழுதுபோக்குவதற்கு தேவைப்படும் தொகை போன்றவற்றை பட்டியலிட்டு மொத்த தொகையை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

நாம் தேர்வு செய்துள்ள பல்கலை அல்லது கல்லூரி அமெரிக்காவின் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை முன்னதாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பிரபலமான மாநிலங்களின் தலைநகரில் உள்ள கல்லூரிக்கும், சிறிய நகரங்கள் மற்றும் தீவுகள், சுற்றுலா தலங்களின் அருகில் அமைந்துள்ள கல்லூரிக்கும் உள்ள கட்டணவிகிதம் வேறுபடும். எனவே மொத்த தொகையை நாம் பட்டியலிடும்போது அந்தந்த கல்லூரிகள் அமைந்துள்ள இடத்தின் பொருளாதார நிலைக்கேற்ப கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள சில கல்லூரிகள் கடுமையான குளிர்பிரதேசங்களில் அமைந்துள்ளன. இந்த கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்கள் கடும் குளிரை தாங்குவதற்கு தேவையான உடை மற்றும் காலணிகளுக்கு அதிகமான தொகையை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைகள் இளங்கலை பட்டப்படிப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முழு கல்வி உதவிதொகையை வழங்கி வருகின்றன. சர்வதேச அளவில் கல்வி பயிலும் ஆயிரம் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவில் 100 கல்லூரிகளுக்கு கல்வி உதவி தொ வழங்குவதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்த கல்லூரிககளை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை தேர்வு செய்தால் கல்வி உதவி தொகையை முழுமையாக பெற்று பயனடையலாம்.
 
அமெரிக்காவில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை பெற்றுள்ள மாணவர்கள் தங்கள் கல்வி கட்டணத்தை குறைத்து கொள்வதற்கான வழிமுறைகள் வருமாறு:
 
குறைவான கல்வி கட்டணத்தில் தரமான கல்வியை கற்றுதரும் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கான இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள் கோடை விடுமுறைகளில் கூடுதலாக ஒரு பாடப்பிரிவினை தேர்வு செய்து படிப்பதன் மூலம் அதற்காக தேவைப்படும் ஆயிரம் டாலர் பணத்தை சேமித்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் படிப்பிற்கான சிறந்த மாணவர் விருதினை பெறுவதன் மூலம் அடுத்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் பாதி தொகையை மட்டும் செலுத்துவதற்கான வாய்ப்பினை பெறலாம். பல்கலை., விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் தங்கள் ஓய்வுநேரங்களில் அங்குள்ள சமையல் அறைகளில் பணியாற்றினால் அதற்கான ஊதியம் கிடைப்பதோடு முழு நேர உணவினை இலவசமாக பெறுவார்கள்.

பல்கலை., வளாகத்திற்குள் உள்ள குடியிருப்புகளில் நண்பர்களின் உறவினர்கள் தங்கியிருந்தால் அவர்களோடு இணைந்து கொள்வதன் மூலம் விடுதி கட்டணத்தை பாதியாக குறைத்துக் கொள்வதோடு போக்குவரத்திற்கான கட்டணத்தையும் தவிர்த்துக் கொள்ளலாம். பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகளில் முதல் இரண்டு ஆண்டுகளில் செய்யும் பணிகள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவைப்படும் கல்வி கட்டணத்தில் ஆயிரம் டாலர் பணத்தை சுலபமாக சேமித்துக் கொள்கின்றனர். இந்த வழிமுறையை இந்திய மாணவர்கள் பின்பற்றலாம்.
 
அமெரிக்காவில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை சர்வதேச அளவில் பெற்றுள்ள மாண-வர்களுக்கு ஒவ்வொரு வாரமும் அதிகபட்சமாக 20 மணி நேரம் பல்கலை வளாகத்திற்குள் பணியாற்றுவதற்கான அனுமதியினை அதிகாரிகள் அளித்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் புத்தகங்கள், உடைகள், பொழுதுபோக்கிற்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

இது தவிர பல்கலை.,யில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி-யாளர்களுக்கு உதவியாளராக பணியாற்றுவது, விடுதிக்கு வரும் பார்வையாளர்களுக்கும் மற்றும் டெலிபோன் அழைப்புகளுக்கு பதில் சொல்வது, படிப்பு தொடர்பாக தயாரிக்கப்படும் ஒலி, ஒளி குறுந்தட்டுகளை உரியவர்களிடமிருந்து பெற்று வகுப்பு மாணவர்களுக்கு வினியோகிப்பது, பல்கலை.,யில் உள்ள நூலகங்கள், புத்தக கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், நிர்வாகத்துறை தொடர்பான அலுவலகங்களில் வேலை செய்வதன் மூலம் பணத்தை சம்பாதிக்கலாம். இந்த பணம் பல்கலை.,க்குள் சுற்றுவதற்கான சைக்கிள் வாடகை, உடைகளை உலர்த்தி இஸ்திரி செய்வதற்கான கட்டணம் மற்றும் லேப்டாப்பினை பழுதுபார்ப்பதற்கான செலவுகளை ஈடு செய்யும்.

இதன் மூலம் இந்திய மாணவர்கள் தங்கள் கல்வி கட்டணத்தை குறைத்துக் கொண்டு நிறைவான அனுபவத்தை பெற்று தலை சிறந்த மாணவர்களாக தாயகத்திற்கு திரும்பலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us