தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒவ்வொரு 10 மதிப்பெண்ணும் மாற்றத்தை ஏற்படுத்தும்:தினமலர் ஆசிரியர்

ஒவ்வொரு 10 மதிப்பெண்ணும் மாற்றத்தை ஏற்படுத்தும்:தினமலர் ஆசிரியர்

ஒவ்வொரு 10 மதிப்பெண்ணும் மாற்றத்தை ஏற்படுத்தும்:தினமலர் ஆசிரியர்


UPDATED : நவ 26, 2009 12:00 AM

ADDED : நவ 26, 2009 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2009 12:00 AM ADDED : நவ 26, 2009 09:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள சென்னை மாநகராட்சி மாணவ, மாணவியருக்காக, தினமலர் நடத்தும், ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடந்தது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கூடியிருந்த அரங்கில், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

இங்கு கூடியிருக்கும் மாணவ, மாணவியர் அமைதியாக அமர்ந்து குறிப்பு எடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக மாணவர்கள் மிகவும் அமைதியாக இருப்பது மகிழ்ச்சி. கடந்த நிகழ்ச்சியில் கூட, இது போல அமைதியைக் காண முடியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே அரங்கில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்திருந்த போது, அவர் கையசைக்கும் போது, மாடிப் பகுதியில் இருந்து வந்த கைதட்டலை மறக்க முடியாது. அது தான், என் வாழ்க்கையில் நான் அடைந்த மிகப் பெரிய மகிழ்ச்சி.நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு 10 மதிப்பெண் ணும், உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற் றத்தை ஏற்படுத்தும். ஆகையால் தான், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு, உங்களுக்கு பாடங்கள் எடுக்கிறோம். அவர்கள் சொல்லிக் கொடுப்பதை கவனமாக குறிப்பு எடுக்க வேண்டும்.

வீட்டிற்கு சென்ற பின், அதை திரும்ப படிக்க வேண்டும். எடுத்த குறிப்புகளை விளக்கமாக எழுதி படிக்க வேண்டும். அப்படி தயாராகும் போது, நீங்கள் தேர்வை எளிதில் சந்திக்கலாம். இவ்வாறு ஆசிரியர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us