நவ 28ல் ஆன்லைன் கேட் தேர்வு: 2.4 லட்சம் பேர் எழுதுகின்றனர்
நவ 28ல் ஆன்லைன் கேட் தேர்வு: 2.4 லட்சம் பேர் எழுதுகின்றனர்
UPDATED : நவ 27, 2009 12:00 AM
ADDED : நவ 27, 2009 03:42 PM
அ நிறம் | அளவு
டிசம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வை 2.4 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாட்டில் 32 நகரங்களில் 105 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நவம்பர் 28ம் தேதி நடைபெறும் இத்தேர்வில 1400 மாணவர்கள் எழுதுகின்றனர். ஆன்லைன் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் அனுபவங்களைக் கேட்டுவிட்டு, அடுத்த முறை இத்தேர்வு எழுத பல மாணவர்கள் காத்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் தேர்வில் மாணவர்கள், தங்களுக்காக உள்ள பிரிவில் எந்தப் பிரிவு கேள்விகளை முதலில் எடுத்து பதில் எழுதலாம் என்று முடிவு செய்ய முடியாது. கேள்வி கம்ப்யூட்டர் திரையில் வந்து விட்டால் அதற்கு பதில் அளிக்க வேண்டும் தெரியாவிட்டால் விட்டுவிட்டு அடுத்த கேள்விக்கு போய் விட வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில் நெகட்டிவ் மார்க்கிங் உள்ளது என்பதை சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த புதிய முறை எப்படி செயல்படுகிறது என்பது மாணவர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
