தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மகிழ்ச்சியாக படித்தால், வெற்றி தானாக வந்து சேரும்

மகிழ்ச்சியாக படித்தால், வெற்றி தானாக வந்து சேரும்

மகிழ்ச்சியாக படித்தால், வெற்றி தானாக வந்து சேரும்


UPDATED : நவ 27, 2009 12:00 AM

ADDED : நவ 27, 2009 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2009 12:00 AM ADDED : நவ 27, 2009 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு பேசியதாவது:


மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதில், ஆசிரியர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனமாக கேட்டாலே, 25 சதவீத பாடம் உங்களுக்கு புரிந்து விடும்.


அந்தப் பாடங்களை அன்றைக்கே வீட்டில் சென்று படிப்பதன் மூலமும், படித்ததை நண்பர்களுடன் குழு விவாதம் செய்வதன் வாயிலாகவும், ஒரு பாடம் நம் மனதில் தெளிவாக பதிகிறது.


அவற்றை வார இறுதியில், ஒருமுறை திருப்பிப் பார்க்க வேண்டும். பாட வாரியாக, உங்கள் பலம், பலவீனம் அறிந்து, அதன்படி படிப்பதற்கான நேர அட்டவணையை தயார் செய்ய வேண்டும். மதிய நேரத்தில் துவக்கம் வந்தால், அப்போது, உங்களுக்கு பிடித்த பாடத்தை படியுங்கள்.


படித்தவற்றை தேர்வு வரையிலாவது ஞாபகம் வைத்துக் கொள்வது முக்கியம். அதற்கு, அறிவியல் பாடங்களில் வரும் முக்கிய விதிகள், அலகுகள் உள்ளிட்டவற்றை தினமும் சில நிமிடம் சொல்லிப் பார்க்க வேண்டும்.


ஐம்பது வெவ்வேறு வகையான பொருட்களை, ஐந்து நிமிடம் உற்று நோக்கிவிட்டு, அவற்றின் பெயர்களை பட்டியலிட வேண்டும். அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் சரியாக எழுதும் வரை, தினமும் இப்பயிற்சியை செய்தால், உங்களின் கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.


குறிப்பிட்ட கேள்வி, தேர்வுக்கு கட்டாயம் வரும் என்று சக மாணவர்கள் கூறி, அதற்கான விடை உங்களுக்கு தெரியவில்லை என்றால், அதற்காக பரபரப்பு அடைய வேண்டாம். இதனால், நன்றாக படித்த பாடங்களும் மறந்துவிடும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பதை விட, பாடப் புத்தகம் வாசிப்பதை மகிழ்ச்சியான அனுபவமாக எண்ணிப் படியுங்கள்; வெற்றி தானாக வரும். இவ்வாறு இறையன்பு பேசினார்.


கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், சென்னை மாவட்ட அளவில், 1,127 மதிப்பெண்கள் எடுத்து, மாநகராட்சி பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்த சங்கீதாவுக்கு, நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவரின் சார்பில் நிகழ்ச்சிக்கு வந்த, அவரது தங்கை சோபனாவிடம், தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் உருவம் பொறித்த வெள்ளி பதக்கமும், அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகமும் பரிசாக தரப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us