தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்த எதிர்ப்பு

ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்த எதிர்ப்பு

ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்த எதிர்ப்பு


UPDATED : நவ 27, 2009 12:00 AM

ADDED : நவ 27, 2009 05:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2009 12:00 AM ADDED : நவ 27, 2009 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, ஓய்வு பெறும் வயதை 62 வயதிலிருந்து 65 வயதாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலைக் குழுவின் தலைவரான ஆஸ்கார் பெர்ணான்டஸ், இளைஞர்களை ஆசிரியர் பணிக்கு ஈர்க்கும் வகையில் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்ற உயர்கல்வித்துறையின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிட்டார்.
 
ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிலைக் குழு சிபாரிசு செய்துள்ளது. ஓய்வு பெறும் வயதில் இருப்பவர்களை பணி நீட்டிப்பு செய்வதால், புத்தாக பணிகளில் ஈடுபடுவதில் அவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்றும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த கடந்த ஆண்டில் முடிவு செய்துள்ளது. 24 மத்திய பல்கலைக்கழகங்களில் 8,723 இடங்களில் 1,707 இடங்கள் காலியாக உள்ளன. அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மட்டும் 200 இடங்கள் காலியாக உள்ளன என்பதையும் இந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us