தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் நாளிதழ் சேவை அளப்பரியது: துணைவேந்தர் சபாபதி மோகன்

தினமலர் நாளிதழ் சேவை அளப்பரியது: துணைவேந்தர் சபாபதி மோகன்

தினமலர் நாளிதழ் சேவை அளப்பரியது: துணைவேந்தர் சபாபதி மோகன்


UPDATED : நவ 28, 2009 12:00 AM

ADDED : நவ 28, 2009 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2009 12:00 AM ADDED : நவ 28, 2009 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு மையம் மற்றும் தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் ஆகியவற்றுடன் இணைந்து மயிலாப்பூர் திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில், மாணவ - மாணவியருக்கு ஊடகத்துறையில் அறிவியல் எழுத்துத் திறன் வளர்ப்புக்கான கருத்தரங்கம் நடந்தது.
 
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கின் நிறைவு நிகழ்ச்சி நடந்தது. கருத்தரங்கிற்கு நீதிபதி ஜெகதீசன் தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் சபாபதி மோகன் சிறப்புரையாற்றினார். மயிலாப்பூர், திருவள்ளுவர் சங்க செயலர் சேயோன் அறிமுகஉரை நிகழ்த்தினார்.
தொழிலதிபர் அய்யாசாமி வரவேற்றார். அறிவியல் அறிஞர் நட்டியால் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் முத்துவேல் நன்றி கூறினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் சபாபதி மோகன் பேசியதாவது:
 
ஒருவருக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது. அதற்கான ஊக்கமும் வழங்கப்பட வேண்டும். அதே போல் படிப்பு மட்டும் இருந்தால் போதாது. நாம் கற்ற விஷயத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பறிவில்லாதவர்களுக்கும், அவர்களுக்கு தெரிந்த தொழிலில் வல்லுனர்களாக மாற்ற சமூக பாடப்பிரிவுகள் அவசியம் தேவை. அத்தகைய பாடப்பிரிவுகள் எங்கள் பல்கலையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இன்றைய காலகட்டத்திற்கு ஆங்கில அறிவு அவசியம். தமிழ் அறிவு நாம் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளவும், ஆங்கில அறிவு நம்மை உலகிற்கு எடுத்துச் சொல்லவும் பயன்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் மக்கள் விரும்பும் செய்திகளை மட்டும் தந்து கொண்டிருக்காமல், அறிவியல் உள்ளிட்ட பல நல்ல செய்திகளை மக்கள் விரும்பும் வகையில் தர வேண்டும்.

இன்றைக்கு தொலைக்காட்சி நாடகங்கள் செல்வாக்கு இழந்து வருகின்றன. விதவிதமான நிகழ்ச்சிகள் செல்வாக்கு பெற்று வருகின்றன. தொடர்பியல் துறைக்கு, தினமலர் நாளிதழ் ஆற்றியுள்ள சேவை மகத்தானது. தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ஒரு கோடி ரூபாய் செலவில் எங்கள் பல்கலைக் கழகத்தில் ஒரு அற்புதமான ஸ்டுடியோ உருவாக்கி கொடுத்துள்ளார். இதன் மூலம், வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் மாணவர்கள் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். இது போன்ற நிலை வளர வேண்டும். இவ்வாறு சபாபதி மோகன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us