UPDATED : நவ 28, 2009 12:00 AM
ADDED : நவ 28, 2009 01:03 PM
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளைப் படிக்க வாய்ப்பு இருப்பதை அடுத்து, கேந்திரிய வித்யாலய பள்ளிகளிலும் இதுபோல வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்புக்கும் புதுடில்லியில் உள்ள கோதே இன்ஸ்டிட்யூட் அமைப்புக்கும இடையே கடநத் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து சென்னையில் உள்ள 14 கேந்திரிய வித்யாலயங்கலில் 11 பள்ளிகள், தங்களது பள்ளிகளில் ஜெர்மன் மொழியை மாணவர்களுக்குக் கற்றுத்தர ஆர்வமாக உள்ளனர். மாணவர்களுக்கு ஜெர்மன் மொழியைக் கற்றுத்தருவதற்கான பயிற்சியின் தொடக்கத்தில் 90 ஆசிரியர்கள் பதிவு செய்தனர். தற்போது 17 ஆசிரியர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர் என்று கேந்திரிய வித்யாலயா சங்கதன் மண்டல அலுவலக கல்வித்துறை அதிகாரி கே. உஷா ராணி தெரிவித்தார்.
அடுத்த கல்வி ஆண்டில் 8 பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடம் கற்றுத்தரப்படும் என்று மாக்ஸ் முல்லர் பவன் மொழித்துறைத் தலைவர் பிரபாகர் நாராயணன் தெரிவித்துள்ளார். சென்னை நகரில் 12 பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஜெர்மன் மொழிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல அரசுப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
