UPDATED : நவ 29, 2009 12:00 AM
ADDED : நவ 29, 2009 10:12 AM
கடந்த ஆண்டு 27.1.2008ல் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் டைப்பிஸ்டுகள் பணிநியமனத்தி ற்கான தேர்வு நடந்தது. 60 ஆயிரம் பேர் வரை இத்தேர்வில் பங்கேற்றனர். இவர்களுக்கு 10 மாதங்களுக்கு பின் 7.11.2008ல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
பின்பு பணிவாய்ப்பு பெற்றோருக்கு டிசம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. கடந்த ஜூலையில் முதல் கட்டமாக நடந்த இப்பணியில் 3 ஆயிரத்து 300 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. அவர்கள் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இதற்கிடையில் முதற்கட்ட வாய்ப்பில் பணியில் சேராமல் உள்ளவர்களின் இடத்தை நிரப்ப, ரிசர்வ்வாக 502 பேர் வரை தேர்ந்தெடுத்தனர்.
ஆனால், அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி இதுவரை நடக்கவில்லை. இதனால், அவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். தங்களுக்கு இனி வாய்ப்பு கிடைக்குமா, இல்லையா? என்ற நிலை தெரியாமல் தவிப்பில் உள்ளனர். பொதுவாக பணிநியமனம் செய்யப்படுவோர் அதில் சேர ஒரு மாதம் வரை அவகாசம் வழங்கப்படும். ஆனால், கடந்த ஜூலையில் நியமிக்கப்பட்ட இடங்களில் காலியாக உள்ள இடங்களில் தங்களை நியமிக்க மாட்டார்களா, என்ற பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
